13 வயது ம.பி. சிறுவனுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதா? குறுந்தகவலால் அதிர்ச்சி

சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்னமும் ஆய்வகப் பரிசோதனையில் இருக்கும் நிலையில்,
13 வயது ம.பி. சிறுவனுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக குறுந்தகவல்; தந்தை அதிர்ச்சி
13 வயது ம.பி. சிறுவனுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக குறுந்தகவல்; தந்தை அதிர்ச்சி


போபால்: சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்னமும் ஆய்வகப் பரிசோதனையில் இருக்கும் நிலையில், போபாலைச் சேர்ந்த 13 வயது சிறுவனுக்கு தடுப்பூசி செலுத்தி விட்டதாக அதுவும் 56 வயது என்று குறிப்பிட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மோசமான தவறு என்று நடந்திருக்கிறது என்றால், மத்தியப் பிரதேசத்தில் ஜூன் 21-ஆம் தேதி ஒரே நாளில் 17 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்ததாக செய்திகள் வெளியான அன்றுதான்.

அவ்வாறு தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக சான்றிதழ் அளிக்கப்பட்ட சிறுவனின் பெயர் வேதாந்த் டாங்ரே. ஜூன் 21-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு, எனது செல்லிடப்பேசியில் ஒரு தகவல் வந்தது. அதில், எனது 13 வயது மகனுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது. இன்னமும் சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டமே தொடங்காத நிலையில், இந்தத் தவறு எவ்வாறு நிகழ்ந்தது என்று நான் குழம்பிப் போனேன் என்கிறார் சிறுவனின் தந்தை ரஜத் டாங்ரே.

இன்னும் ஆச்சரியம் இருக்கிறது.. அந்த தகவலில் என் மகனின் வயது 56 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வாறு சான்றிதழ் கொடுத்திருக்கிறார்களே, உண்மையிலேயே குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கும் போது எப்படி எனது மகனுக்கு தடுப்பூசி செலுத்த முடியும் என்று கலங்கி நிற்கிறார் மாற்றுத் திறனாளி சிறுவனான வேதாந்த் டாங்கரேவின் தந்தை.

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கான சான்றிதழை இணையதளத்தில் இருந்து நான் பதிவிறக்கம் செய்த போது, அதில், எனது சிறுவனின் பெயரில், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகைப் பெற இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட வங்கிக் கணக்கின் விவரங்களும், வீட்டு முகவரியும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது பற்றி பல அலுவலகத்துக்கும் சென்று பிழையை நீக்க முயற்சித்தேன். ஆனால் வழக்கம் போல முடியவில்லை என்கிறார் தனது மகனின் கரோனா சான்றிதழை கையில் வைத்துக் கொண்டு.

இது போலவே, போபாலில் நுஜத் சலீம் என்ற 46 வயது நபருக்கும், அதே ஜூன் 21-ஆம் தேதி தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக குறுந்தகவல் வந்துள்ளது. அந்தத் தகவலை பார்த்ததும், இனி எப்படித்தான் நான் முறையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியும் என்ற கவலைதான் எழுந்தது என்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com