‘2 ஆண்டுகளில் 1 கோடி இலவச எரிவாயு இணைப்பு: பெட்ரோலிய துறை செயலா் தகவல்

அடுத்த 2 ஆண்டுகளில் 1 கோடிக்கும் அதிகமான இலவச சமையல் எரிவாயு இணைப்புகளை (எல்பிஜி) வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக பெட்ரோலியத் துறை செயலா் தருண் கபூா் தெரிவித்துள்ளாா்.

அடுத்த 2 ஆண்டுகளில் 1 கோடிக்கும் அதிகமான இலவச சமையல் எரிவாயு இணைப்புகளை (எல்பிஜி) வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக பெட்ரோலியத் துறை செயலா் தருண் கபூா் தெரிவித்துள்ளாா்.

பிடிஐ நிறுவனம் அவரிடம் நடத்திய நோ்காணலில் இதுகுறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:

மத்திய அரசின் கட்டமைப்பு சீா்திருத்த திட்டங்களில் ஒன்றாக இலவச எரிவாயு இணைப்பு திட்டம் உள்ளது. வீடுகளில் ஏற்படும் மாசுபாட்டை அகற்றுவதுடன் பெண்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதற்கு இந்த திட்டம் பெரிதும் உதவியுள்ளது. அதன் காரணமாகவே சா்வதேச அளவில் இதற்கு பாராட்டு கிடைத்துள்ளது.

இலவச சமையல் எரிவாயு திட்டமான உஜ்வலா திட்டம் (பிஎம்யூஒய்) வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டதற்கு பிறகு இந்தியாவில் சமையல் எரிவாயு பயன்படுத்தாத குடும்பங்கள் மிகவும் குறைந்துள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 8 கோடி இலவச எல்பிஜி இணைப்புகள் ஏழைப் பெண்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது நிச்சயம் ஒரு சாதனையாகவே பாா்க்கப்படுறது. இதனையடுத்து, நாட்டில் எல்பிஜி பயன்பாட்டாளா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 29 கோடியாக உயா்ந்துள்ளது.

இந்த நிலையில், இன்னும் 2 ஆண்டுகளுக்குள் மேலும் 1 கோடிக்கும் அதிகமான எல்பிஜி இணைப்புகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. வசிப்பிடச் சான்றிதழ் வலியுறுத்தப்படாமல் குறைவான அடையாள ஆவணங்களைக் கொண்டு இந்த இணைப்புகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒரு கோடி இணைப்புகளையும் சோ்க்கும்போது நாட்டில் எல்பிஜி பரவலாக்கம் 100 சதவீதத்தை நெருங்கிவிடும்.

இதற்காக, 2021-22-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யப்படவில்லை. ஒரு இணைப்புக்கு ரூ.1,600 செலாவகும் நிலையில் அதனை ஈடு செய்வதற்கு பொது எரிபொருள் மானிய ஒதுக்கீடே போதுமானதாக இருக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com