80% காவலர்களுக்கு கரோனா தடுப்பூசி: தில்லி காவல்துறை

தில்லி காவல்துறையினரில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக திங்கள்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதுதொடர்பாக மூத்த காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், 

வெள்ளிக்கிழமை இரவு 7 மணி வரை மொத்தம் 66,246 காவல்துறையினருக்கு கரோனா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

தில்லியின் 15 மாவட்டங்களில், போக்குவரத்து, குற்றப்பிரிவு, பாதுகாப்பு, மெட்ரோ, ரயில்வே உள்பட காவல்துறையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் ஆவார். 

தில்லி காவல்துறையில் 80,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். கடந்த 9-ஆம் தேதி தில்லி காவல் ஆணையர் எஸ்.என் ஸ்ரீவாஸ்தவா சாணக்கியபுரியில் உள்ள பிரைமஸ் சிறப்பு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதுவரை எந்தவொரு பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. 

ஒவ்வொருவரின் ஆரோக்கியத்திற்கு கரோனா தடுப்பூசி மிகவும் அவசியம். எனவே, அனைவரும் தடுப்பூசியைத் தவறாமல் போட்டுக்கொள்ளவேண்டும் என்றார். 

கரோனா காரணமாக காவல்துறையில் 34 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com