அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.1 கோடிக்கு கூடுதல் நிலம் வாங்கியது அறக்கட்டளை

அயோத்தியில் ராமர் கோயில் வளாகத்தை விரிவுபடுத்தும் வகையில், அருகிலிருந்த 676.85 சதுர மீட்டர் நிலப்பரப்பை ஸ்ரீ ராம் ஜன்மபூமி அறக்கட்டளை ரூ.1 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.1 கோடிக்கு கூடுதல் நிலம் வாங்கியது அறக்கட்டளை
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.1 கோடிக்கு கூடுதல் நிலம் வாங்கியது அறக்கட்டளை


லக்னௌ: அயோத்தியில் ராமர் கோயில் வளாகத்தை விரிவுபடுத்தும் வகையில், அருகிலிருந்த 676.85 சதுர மீட்டர் நிலப்பரப்பை ஸ்ரீ ராம் ஜன்மபூமி அறக்கட்டளை ரூ.1 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.

அயோத்தியில் ஏற்கனவே, 70 ஏக்கர் நிலப்பரப்பில் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், வளாகத்தின் சுற்றளவை அதிகரிக்கும் வகையில் அருகிலிருந்த நிலப்பரப்பு விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது.

நிலத்துக்குச் சொந்தக்காரரான சுவாமி தீப்நாராயணனிடமிருந்து ரூ.1 கோடி கொடுத்து அந்த நிலத்தை அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் வாங்கியிருப்பதாகவும், இதற்கான பத்திரப்பதிவு செவ்வாயன்று நடைபெற்று முடிந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோயில் வளாகத்துக்கு அருகில் இருக்கும் நிலம் மற்றும் பழைய வீடுகளை வாங்கி, கோயில் வளாகத்தின் சுற்றளவை அதிகரிப்பது என்ற ராமர் கோயில் கட்டும் பணி திட்டத்தின் அடிப்படையில் இந்த நிலம் வாங்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு, ராமர் கோயில் கட்ட 70 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், கட்டட வடிவமைப்பின்படி, ராமர் கோயில் கட்ட 107 ஏக்கர் நிலப்பரப்பு தேவைப்படுதால், அருகிலுள்ள நிலங்கள் மற்றும் பழைய வீடுகளை வாங்கும் பணி தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமர் கோயில் கட்ட அமைக்கப்பட்டிருக்கும் அறக்கட்டளை இதுவரை ரூ.2100 கோடியை திரட்டியிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

அயோத்தியில் ராமா் கோயில் பூமி பூஜை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-அம் தேதி பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்றது. ராம ஜென்மபூமியில் ராமருக்கு கோயில் கட்டுவதற்கான முதல் செங்கல்லை பிரதமா் மோடி எடுத்துக் கொடுத்து கட்டுமானப் பணியை தொடக்கி வைத்தாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com