கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்ட கோவா முதல்வர் 

கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் புதன்கிழமை சான்கெலிமில் உள்ள ஒரு ஆரம்பச் சுகாதார மையத்தில் முதன்முதலாக கரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார். 
கோவா முதல்வர் பிரமோந்த் சாவந்த்
கோவா முதல்வர் பிரமோந்த் சாவந்த்

கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் புதன்கிழமை சான்கெலிமில் உள்ள ஒரு ஆரம்பச் சுகாதார மையத்தில் முதன்முதலாக கரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், 

கரோனா தடுப்பூசி போடத் தகுதியுள்ளவர்கள் முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று அவர் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் மார்ச் 1-ம் தேதி முதல் இரண்டாம் கட்ட கரோனா தடுப்பூசி 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் போடுவதைத் தொடங்கியுள்ளது. 

கடந்த திங்களன்று, புதுதில்லியில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) கரோனா தடுப்பூசியை பிரதமர் நரேந்திர மோடி செலுத்திக்கொண்டார். 

மேலும், அமித்ஷா, எஸ்.ஜெய்சங்கர், ஜிதேந்திர சிங், டாக்டர் ஹர்ஷ் வர்தன் உள்ளிட்ட பல மத்திய அமைச்சர்களும் கரோனா தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டுள்ளனர். 

நாட்டில் மொத்தம் இதுவரை 1,56,20,749 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com