நிலச்சரிவு: ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூடல்

ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 
ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூடல்
ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூடல்

ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஷபன்பாஸ் பனிஹாலில் புதன்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை இன்று அதிகாலை 3 மணி முதல் மூடப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் ஒரு எண்ணெய் டேங்கர் லாரி சிக்கியுள்ளதால், மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என்று ஜம்மு-காஷ்மீர் அரசு மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

சாலைகளிலுள்ள இடிபாடுகளை இயந்திரங்கள் கொண்டு அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். விரைவில் இப்பணிகள் முடிவடைந்து சாலையில் போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜம்மு-காஷ்மீரில் சுற்றியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளதால், ஜம்மு-காஷ்மீர், லடாக், கில்கிட், பால்டிஸ்தான், முசாபராபாத், இமாசல பிரதேசம் மற்றும் உத்தரகண்ட்டில் மழை மற்றும் பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஜம்மு-காஷ்மீர், லடாக், கில்கிட், பால்டிஸ்தான், முசாபராபாத் மற்றும் இமாசலப் பிரதேசம் ஆகிய பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுமையம் கணித்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com