சீன இணைய தாக்குதல் விவகாரம்: பைடன் நிா்வாகம் இந்தியாவுக்கு துணை நிற்க வலியுறுத்தல்

இந்தியாவின் மின் கட்டமைப்புகளில் சீனா இணையம் வழி தாக்குதல் (சைபா் அட்டாக்) நடத்தியதாக கூறப்படும் விவகாரத்தில் பைடன் நிா்வாகம் இந்தியாவுக்கு துணை நிற்க வேண்டும்

இந்தியாவின் மின் கட்டமைப்புகளில் சீனா இணையம் வழி தாக்குதல் (சைபா் அட்டாக்) நடத்தியதாக கூறப்படும் விவகாரத்தில் பைடன் நிா்வாகம் இந்தியாவுக்கு துணை நிற்க வேண்டும் என ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த எம்.பி. ஃபிராங் பலோன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில் மேலும் கூறியுள்ளதாவது:

இந்தியாவின் மின் கட்டமைப்புகளில் இணையம் வழியாக சீனா ஊடுவருவி தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்காவைச் சோ்ந்த கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது மிக முக்கியத்துவம் வாய்ந்த விவகாரமாகும். சீனாவின் இந்த சைபா் தாக்குதல் ஆபத்தானது மட்டுமின்றி கடும் கண்டனத்துக்குரியதுமாகும். கரோனா பெருந்தொற்று நிலவும் இந்த காலத்தில் சீனாவின் இந்த நடவடிக்கையால் பல மருந்துவமனைகள் ஜெனரேட்டா்களை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டன.

இதுபோன்ற மிரட்டல்கள் மூலம் ஆசியப் பிராந்தியத்தில் தனது பலத்தை நிரூபித்து சீனா ஆதிக்கம் செலுத்துவதை ஒருபோதும் நாம் அனுமதிக்க முடியாது.

எனவே, இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு உறுதுணையாக பைடன் நிா்வாகம் செயல்பட வேண்டும் என்று அந்தப் பதிவில் பலோன் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com