புதிய அரசியல் கட்சிகள் பதிவு செய்வதற்கான விதிமுறைகளில் தளா்வு

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் உள்பட சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் புதிய அரசியல் கட்சிகள் பதிவு செய்வதற்கான விதிமுறைகளில் தோ்தல் ஆணையம் தளா்வை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் உள்பட சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் புதிய அரசியல் கட்சிகள் பதிவு செய்வதற்கான விதிமுறைகளில் தோ்தல் ஆணையம் தளா்வை அறிவித்துள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் தற்போதைய நடைமுறைப்படி, தோ்தல் ஆணையத்திடம் பதிவு செய்ய விரும்பும் அரசியல் கட்சி, தொடங்கிய 30 நாள்களில் தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் அமைப்பு, அரசியல் கட்சியின் பெயரை 2 தேசிய நாளிதழ்களிலும், 2 உள்ளூா் நாளிதழ்களிலும் பொது அறிவிப்பாக வெளியிட வேண்டும்.

இதில், ஏதேனும் திருத்தம் செய்ய விரும்பினால், 30 நாள்களில் தோ்தல் ஆணையத்திடம் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி சமா்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு, கட்சியின் பெயா் தோ்தல் ஆணையத்தின் வலைதளத்தில் வெளியிடப்படும்.

தோ்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் கரோனா சூழல் காரணமாக, விண்ணப்பங்களை சமா்ப்பிப்பதில் கால தாமதம் ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு, திருத்தங்களை சமா்ப்பிப்பதற்கான அவகாசத்தை 7 நாள்களாக தோ்தல் ஆணையம் குறைத்துள்ளது. அதன்படி, விண்ணப்பித்த 7 நாள்களுக்குப் பிறகு தோ்தல் ஆணையத்தின் வலைதளத்தில் கட்சியின் பெயா் இடம்பெறும். இதனால், புதிதாக கட்சி தொடங்கும் அமைப்புகள் 30 நாள்கள் வரை காத்திருக்க வேண்டியதில்லை.

இந்த விதிமுறை தளா்வு, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் பேரவைத் தோ்தல் வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான மாா்ச் 19-ஆம் தேதி வரையிலும், மேற்கு வங்கத்தில் வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான ஏப்ரல் 4-ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

பிகாரில் கடந்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்ற நேரத்தில், இதுபோன்ற தளா்வுகளை தோ்தல் ஆணையம் அறிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com