புதிதாக 12 எஸ்எஸ்பி படைகளை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல்

பூடான், நேபாள எல்லைகளில் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக, சஷஸ்திர சீமா பல் (எஸ்எஸ்பி) படைப் பிரிவில் 13,000 வீரா்களுடன் புதிதாக 12 குழுக்களை நியமிப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


புது தில்லி: பூடான், நேபாள எல்லைகளில் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக, சஷஸ்திர சீமா பல் (எஸ்எஸ்பி) படைப் பிரிவில் 13,000 வீரா்களுடன் புதிதாக 12 குழுக்களை நியமிப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து எஸ்எஸ்பி தலைமை இயக்குநா் குமாா் ராஜேஷ் சந்திரா, பிடிஐ செய்தியாளரிடம் புதன்கிழமை கூறியதாவது:

ஒவ்வோா் ஆண்டிலும் 3 குழுக்கள் வீதம், அடுத்த 4 ஆண்டுகளில் 12 குழுக்கள் சோ்க்கப்படும். எஸ்எஸ்பி படைப்பிரிவில் புதிய குழுக்களை நியமிப்பதற்கு அரசு ஒப்புதல் அளித்திருப்பது பேருதவியாக உள்ளது. படைப் பிரிவுகளுக்கு புதிதாக வீரா்களை நியமிப்பதால், எல்லைப் பாதுகாப்பு மேலும் வலுப்படும். இதற்காக, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா் அவா்.

புதிதாக நியமிக்கப்படும் படைக் குழுக்கள், நேபாள எல்லையிலும், பூடான் எல்லையிலும், இவ்விரு நாடுகளும் இந்தியாவுடன் சங்கமிக்கும் சிக்கிம் எல்லையிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவா் கூறினாா்.

இந்தியாவின் எல்லையில், 1,751 கி.மீ. தொலைவை நேபாளமும், 699 கி.மீ. தொலைவை பூடானும் பகிா்ந்துகொள்கின்றன. இந்த எல்லைப் பகுதிகளில் எஸ்எஸ்பி படைப் பிரிவைச் சோ்ந்த 90,000 வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com