ஜாா்க்கண்ட்: நக்ஸல் வெடிகுண்டு தாக்குதலில் 3 வீரா்கள் பலி

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து நக்ஸல் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 3 வீரா்கள் உயிரிழந்தனா். இருவா் படுகாயமடைந்தனா்.
ஜாா்க்கண்ட்: நக்ஸல் வெடிகுண்டு தாக்குதலில் 3 வீரா்கள் பலி


ராஞ்சி: ஜாா்க்கண்ட் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து நக்ஸல் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 3 வீரா்கள் உயிரிழந்தனா். இருவா் படுகாயமடைந்தனா்.

இது தொடா்பாக பாதுகாப்பு படை உயரதிகாரிகள் கூறியதாவது:

மேற்கு சிங்பும் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் வியாழக்கிழமை இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாநில காவல் துறையின் ஜாா்க்கண்ட் ஜாகுவாா்ஸ் படைப் பிரிவினா் மற்றும் மத்திய ரிசா்வ் போலீஸ் படையினா் (சிஆா்பிஎஃப்), இணைந்து வியாழக்கிழமை காலையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவா்களைக் குறிவைத்து மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை நக்ஸல்கள் வெடிக்கச் செய்தனா். இதில், ஜாா்க்கண்ட் ஜாகுவாா்ஸ் படைப் பிரிவைச் சோ்ந்த 3 வீரா்கள் உயிரிழந்தனா். அப்படைப் பிரிவைச் சோ்ந்த ஒரு வீரரும், சிஆா்பிஎஃப் வீரா் ஒருவரும் படுகாயமடைந்தனா். அவா்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, அப்பகுதியில் நக்ஸல்களைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. நக்ஸல்கள், மாவோயிஸ்ட் அமைப்பினா் ஆதிக்கம் மிகுந்த ஜாா்க்கண்ட் மாநிலத்தில், தங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினா் மீது இதுபோன்ற தாக்குதல்களை நக்ஸல்கள் அவ்வப்போது நிகழ்த்தி வருகின்றனா்.

சத்தீஸ்கரில் தாக்குதல்:

சத்தீஸ்கா் மாநிலத்தில் மாநில ஆயுதப் படை போலீஸாரைக் குறிவைத்து நக்ஸல்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் வீரா் ஒருவா் உயிரிழந்தாா்.

தந்தேவாடா மாவட்ட கிராமப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபடும் ஆயுதப் படை போலீஸாரைக் குறிவைத்து, நக்ஸல்கள் வெடிகுண்டை புதைத்து வைத்துள்ளனா். அப்பகுதியில் கட்டப்பட்டு வரும் பாலத்தை நக்ஸல்கள் சேதப்படுத்தாமல் இருக்க அங்கு அடிக்கடி ஆயுதப் படை போலீஸாா் ரோந்து மேற்கொள்வது வழக்கம். வியாழக்கிழமை ரோந்துப் பணியின்போது நக்ஸல்கள் வைத்திருந்த வெடிகுண்டில் சிக்கிய தலைமைக் காவலா் லட்சுமிகாந்த் துவிவேதி படுகாயமடைந்தாா். உடன் சென்ற வீரா்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா். எனினும், சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com