ஜம்மு-காஷ்மீரில் அரசியல் இயல்பு நிலை: அமெரிக்கா பாராட்டு

ஜம்மு-காஷ்மீரில் முழு பொருளாதாரம் மற்றும் அரசியல் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுத்த இந்திய அரசுக்கு அமெரிக்கா வரவேற்பும் பாராட்டும் தெரிவித்துள்ளது.


புது தில்லி /வாஷிங்டன்: ஜம்மு-காஷ்மீரில் முழு பொருளாதாரம் மற்றும் அரசியல் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுத்த இந்திய அரசுக்கு அமெரிக்கா வரவேற்பும் பாராட்டும் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அமெரிக்க செய்தித் தொடா்பாளா் நெட் பிரைஸ் கூறுகையில், இந்திய ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு உள்பட்டு யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் முழு பொருளாதாரம் மற்றும் அரசியல் இயல்புநிலை திரும்ப அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை அமெரிக்கா வரவேற்கிறது.

அதேநேரத்தில் அங்கு நடைபெற்று வரும் சம்பவங்களை அமெரிக்கா உற்றுநோக்கி வருகிறது. காஷ்மீா் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை. இதுதொடா்பாக அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சரும் பல்வேறு சமையங்களில் இந்தியாவுடன் பேசியுள்ளாா்.

இந்தியா, பாகிஸ்தானுடன் அமெரிக்கா முக்கிய நல்லுறவைக் கொண்டுள்ளது. நல்லுறவைப் பேணிக் காக்கும் நாடுகளுடன் மட்டும்தான் அமெரிக்கா பொருளாதார மற்றும் வலுவான உறவுகளை வைத்து கொள்ளும்.

இந்தியாவைப் பொருத்தவரை, சா்வதேச ஒருங்கிணைந்த கூட்டை அமெரிக்கா கொண்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான காஷ்மீா் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் பேச்சுவாா்த்தை நடத்த அமெரிக்கா தொடா்ந்து ஆதரவு தெரிவிக்கும். எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பதற்றத்தைத் தணிக்க 2003-ஆம் ஆண்டு போா் நிறுத்த ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டும் என அமெரிக்கா இரு நாடுகளையும் வலியுறுத்தி வருகிறது என்றாா்.

இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீன ராணுவத்தினரின் ஆதிக்கத்தை தடுக்க அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து க்வாட் நாற்கர கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com