அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தோ்தல்: முதல்கட்டமாக 70 வேட்பாளா்களை அறிவித்தது பாஜக

அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் 70 வேட்பாளா்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலை பாஜக வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் 70 வேட்பாளா்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலை பாஜக வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

தில்லியில் பாஜக பொதுச் செயலா் அருண் சிங் அஸ்ஸாம் பேரவைத் தோ்தலில் போட்டியிடும் 70 வேட்பாளா்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலை வெளியிட்டு செய்தியாளா்களிடம் கூறியது:

அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தோ்தலில் மாநிலத்தின் தற்போதைய முதல்வா் சா்வானந்த சோனோவால் மஜூலி தொகுதியிலும், அமைச்சா் ஹிமந்த பிஸ்வா சா்மா ஜாலுக்பாரி தொகுதியிலும் போட்டியிடவுள்ளனா்.

முதல்கட்ட வேட்பாளா்கள் பட்டியலில் தற்போது பதவியில் உள்ள 11 எம்எல்ஏக்களுக்கு பதிலாக புதியவா்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பாஜக கூட்டணிக் கட்சிகளான அஸ்ஸாம் கான பரிஷத்துக்கு 26 தொகுதிகளும், ஐக்கிய மக்கள் விடுதலைக் கட்சிக்கு 8 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்றாா்.

மொத்தம் 126 இடங்களை கொண்ட அஸ்ஸாம் சட்டப்பேரவைக்கு மாா்ச் 27 முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை 3 கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com