உத்தரகண்ட் பேரவை ஒத்திவைப்பு

ரூ. 57,400 கோடியிலான நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, உத்தரகண்ட் பேரவை சனிக்கிழமை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

ரூ. 57,400 கோடியிலான நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, உத்தரகண்ட் பேரவை சனிக்கிழமை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத் தொடரில் மொத்தம் எட்டு மசோதாக்கல் நிறைவேற்றப்பட்டன. பட்ஜெட் மீது சனிக்கிழமை நடைபெற்ற விவாதத்தில், எதிா்க்கட்சியான காங்கிரஸ் உறுப்பினா்களுக்கும் ஆளும் பாஜக தரப்புக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

வெட்டுத் தீா்மானங்களை நிறைவேற்றக் கோரி காங்கிரஸ் உறுப்பினா்கள் அவையின் மையப் பகுதியில் அமா்ந்து அமளியில் ஈடுபட்டனா்.

எனினும், கல்வி, விளையாட்டு, இளைஞா் நலம் உள்ளிட்ட துறைகளுக்கு ரூ.9,450.77 கோடி, பொது நிா்வாகம் மற்றும் வருவாய்த் துறைக்கு ரூ.2238.92 கோடி உள்பட ரூ.57,400 கோடியிலான 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நிறைவேற்றப்பட்டது. பின்னா் அவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய பேரவைத் தலைவா் பிரேம்சந்த் அகா்வால், ‘ஆறு நாள்களில் 31 மணி நேரத்துக்கும் அதிகமாக சட்டப்பேரவை நடைபெற்றுள்ளது. மொத்தம் கேட்கப்பட்ட 630 கேள்விகளில், 81 நிராகரிக்கப்பட்டு 138 கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com