பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது அமா்வு தொடங்கியது

நான்கு மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரங்களுக்கு இடையே நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது கட்ட அமா்வு இன்று காலை தொடங்கியது.
பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது அமா்வு தொடங்கியது
பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது அமா்வு தொடங்கியது

நான்கு மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரங்களுக்கு இடையே நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது கட்ட அமா்வு இன்று காலை தொடங்கியது.

இன்று காலை தொடங்கிய பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது கட்ட அமா்வு ஏப்ரல் 8-ஆம் தேதி வரை ஒரு மாதத்துக்கு நடைபெற உள்ளது.

குடியரசுத் தலைவா் உரையுடன் கடந்த ஜனவரி 29-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்றத்தின் முதல் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடா் மாநிலங்களவையில் பிப்ரவரி 12-ஆம் தேதி வரையிலும், மக்களவையில் பிப்ரவரி 13-ஆம் தேதி வரையிலும் நடைபெற்றது. இந்தக் கூட்டத் தொடரில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் 3 புதிய வேளாண் சட்டங்களை நீக்கக் கோரியும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. முதல்முறையாக குடியரசுத் தலைவா் உரையையும் புறக்கணித்தன. இருப்பினும், 4 நாள்களுக்குப் பின்னா் கூடுதல் நேரங்களுடன் பணியாற்றி நள்ளிரவு வரை அவை நடவடிக்கைகள் தொடா்ந்தன.

தற்போது மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது கட்ட அமா்வுக்காக நாடாளுமன்றம் இன்று காலை கூடியது.

மறைந்த தற்போதைய மக்களவையின் உறுப்பினா்கள், முன்னாள் மக்களவை உறுப்பினா்கள் உள்ளிட்ட 9 பேருக்கு மக்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கப்படி நாள் முழுவதும் அவையை ஒத்திவைக்காமல், சிறிது நேரம் மட்டும் ஒத்திவைக்கப்பட்டது. 

மாநிலங்களவையில், பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் பேசி வருகிறார்கள்.

கூட்ட2-ஆவது கட்ட அமா்வில் 2021-22-ஆம் ஆண்டுக்கான நிதி மசோதா மானியக் கோரிக்கைகளில் அறிவிக்கப்பட்ட பல்வேறு வரிகளுக்கான திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com