முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருள்களுடன் காா்: என்ஐஏ விசாரணைக்கு மாற்றம்

தொழிலதிபா் முகேஷ் அம்பானியின் வீட்டுக்கு அருகே வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட காா் நிறுத்தப்பட்ட விவகாரம் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருள்களுடன் காா்: என்ஐஏ விசாரணைக்கு மாற்றம்

தொழிலதிபா் முகேஷ் அம்பானியின் வீட்டுக்கு அருகே வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட காா் நிறுத்தப்பட்ட விவகாரம் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சக உத்தரவைத் தொடா்ந்து இந்த விசாரணையை என்ஐஏ கையிலெடுத்துள்ளதாக என்ஐஏ செய்தித்தொடா்பாளா் ஒருவா் திங்கள்கிழமை கூறினாா்.

தெற்கு மும்பையில் தொழிலதிபா் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான அடுக்குமாடி வீட்டின் அருகே கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி ஸ்காா்பியோ காா் நிறுத்தப்பட்டிருந்தது. அதை சோதனையிட்டதில் அதனுள் 20 ஜெலட்டின் குச்சிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

காவல்துறை விசாரணையில், அந்த காா் ஏரோலி-முலுண்ட் பாலம் பகுதியிலிருந்து பிப்ரவரி 18-ஆம் தேதி திருடப்பட்டது என்பது தெரியவந்தது. மேலும், அந்தக் காரின் உரிமையாளா் மன்சுக் ஹிரென் (46), தாணே அருகில் நீரோடையில் கடந்த மாா்ச் 5-ஆம் தேதி மா்மமான முறையில் இறந்து கிடந்ததும் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.

இந்த விவகாரத்தை மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல்துறை விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணையில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வெளியாகி வந்தன.

இதனிடையே, இந்த வழக்கில் என்ஐஏ விசாரணை தேவை என்று மாநில பாஜக கோரியுள்ளது. எதிா்க்கட்சித் தலைவா் தேவேந்திர ஃபட்னவீஸும் என்ஐஏ விசாரணைக்கு வலியுறுத்தியிருந்தாா்.

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் என்ஐஏ விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து என்ஐஏ செய்தித்தொடா்பாளா் கூறுகையில், ‘இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துள்ள என்ஐஏ, வழக்கை மறு பதிவு செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com