இடதுகால் முறிவு, கழுத்தில் காயம்: தொடர் கண்காணிப்பில் மம்தா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மருத்துவமனையில் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனை சிகிச்சையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
மருத்துவமனை சிகிச்சையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி


மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மருத்துவமனையில் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு கணுக்கால் மற்றும் பாத முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், வலது தோள்பட்டை, முன்கை மற்றும் கழுத்து ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்குவங்கத் தேர்தலில் ஆளும் திரிணமூல் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார். அதற்காக புதன்கிழமை அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதனைத் தொடர்ந்து நந்திகிராமில் உள்ள துர்கா கோயிலில் வழிபட்ட பிறகு வாகனத்தை நோக்கி சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை தள்ளிவிட்டதாக மம்தா பானர்ஜி பரபரப்பு புகார் தெரிவித்தார்.

இந்த தாக்குதலில் காயம்டைந்த முதல்வர் மம்தாவிற்கு கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவருக்கு சிகிச்சை அளித்துவரும் முதல்வர் சிகிச்சை தொடர்பாக கூறியதாவது, அவருக்கு (மம்தா) பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இடது காலில் கணுக்கால் மற்றும் பாதத்தில் முறிவு ஏற்பட்டுள்ளது. வலது தோள்பட்டை, முன்கை மற்றும் கழுத்து ஆகிய பகுதிகளில் காயம் அடைந்துள்ளார்.

மேலும், மூச்சுவிட சிரமமாக இருப்பதாக முதல்வர் தெரிவித்தார். இதனால் அவர் 48 மணி நேர தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com