திரிணமூல் கட்சியில் இணைந்த முன்னாள் பாஜக மூத்த தலைவர்

பாஜகவின் மூத்த தலைவர் யஷ்வந்த் சிங்ஹா சனிக்கிழமை திரிணமூல் கட்சியில் இணைந்தார்.
திரிணமூல் கட்சியில் இணைந்த பாஜக மூத்த தலைவர்
திரிணமூல் கட்சியில் இணைந்த பாஜக மூத்த தலைவர்

பாஜகவின் மூத்த தலைவர் யஷ்வந்த் சிங்ஹா சனிக்கிழமை திரிணமூல் கட்சியில் இணைந்தார்.

மேற்கு வங்கத் தேர்தல் நடைபெற உள்ளநிலையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் தாங்கள் அங்கம் வகிக்கும் கட்சியில் இருந்து வேறு கட்சிகளுக்கு மாறி வருவது தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா திரிணமூல் கட்சியில் இணைந்தார்.  அதனைத் தொடர்ந்து பேசிய அவர், வாஜ்பாயின் காலத்தில் பாஜக ஒருமித்த கருத்தை நம்பியது. ஆனால் இன்றைய அரசு மக்களை நசுக்குவதை விரும்புகிறது. பாஜக கூட்டணியில் இருந்து பல கட்சிகள் வெளியேறியுள்ளன. இப்போது யார் பாஜக உடன் உள்ளனர்? எனக் கேள்வி எழுப்பினார்.

“ஜனநாயகத்தின் வலிமை என்பது ஜனநாயக நிறுவனங்கள் சுதந்திரமாக செயல்படுவதில் உள்ளது. ஆனால் தற்போது நீதித்துறை உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் பலவீனமாகி விட்டன” எனத் தெரிவித்தார். 

நந்திகிராமில் மம்தா பானர்ஜி தாக்கப்பட்ட சம்பவம தன்னை திரிணமூல் கட்சியில் இணைத்துக் கொள்ள செய்ததாக யஷ்வந்த் சின்ஹா குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com