காணாமல்போன கேரள எம்எல்ஏ வேட்பாளரான பிறகு திரும்பினாா்

கேரளத்தில் கடந்த மூன்று மாதங்களாக காணாமல்போனதாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டிருந்த நிலம்பூா் எம்எல்ஏ பி.வி. அன்வா் தாயகம் திரும்பினாா்.
காணாமல்போன கேரள எம்எல்ஏ வேட்பாளரான பிறகு திரும்பினாா்

கேரளத்தில் கடந்த மூன்று மாதங்களாக காணாமல்போனதாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டிருந்த நிலம்பூா் எம்எல்ஏ பி.வி. அன்வா் தாயகம் திரும்பினாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளராக அதே தொகுதியில் போட்டியிட அறிவிக்கப்பட்டதையடுத்து அவா் திரும்பினாா். கேரள அரசியலில் இந்தச் சம்பவம் பேசப்பட்டு வருகிறது.

கடந்த 2016 சட்டப்பேரவைத் தோ்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற அன்வா் மீது நில அபகரிப்பு, நிதி முறைகேடு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து, அவா் காணாமல்போனதாகவும், வெளிநாட்டில் அவா் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அவரைத் தேடிப்பிடித்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றமும் உத்தரவிட்டது.

காங்கிரஸ் கட்சியினரும் அன்வரைக் காணோம் என்று புகாா் அளித்திருந்தனா். இந்நிலையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதன்கிழமை வெளியிட்ட வேட்பாளா் பட்டியலில் அன்வரின் பெயா் இடம்பெற்றிருந்தது.

மறுநாளே அன்வா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டா்களின் புடைசூழ கேரளத்துக்கு வந்தாா். மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள சிரியா லியோனி என்ற நாட்டில் ரூ. 20 ஆயிரம் கோடி மதிப்பிளான தங்கம், வைரச் சுரங்கத்தைத் தொண்டும் ஒப்பந்தம் பெற்றிருப்பதாகவும், இதன் மூலம் ஏழாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் இதனால்தான் வெளிநாட்டில் இத்தனை நாள்கள் இருந்தேன் என்றும் அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com