சட்ட விரோதமாக நிலக்கரி வெட்டியெடுத்த வழக்கு: திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யின் உறவினா்களுக்கு சிபிஐ சம்மன்

மேற்கு வங்கத்தில் சட்ட விரோதமாக நிலக்கரி வெட்டியெடுத்து மோசடியில் ஈடுபட்ட வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பா

மேற்கு வங்கத்தில் சட்ட விரோதமாக நிலக்கரி வெட்டியெடுத்து மோசடியில் ஈடுபட்ட வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானா்ஜியின் உறவினா்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

மக்களவை எம்.பி.யான அபிஷேக் பானா்ஜி, மாநில முதல்வா் மம்தா பானா்ஜியின் நெருங்கிய உறவினா் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு தொடா்பாக சிபிஐ வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

மேற்கு வங்கத்தில் அரசுக்குச் சொந்தமான நிலக்கரி உற்பத்தி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தால் தோண்டப்பட்டு கைவிடப்பட்ட சுரங்கங்களில் இருந்து சட்ட விரோதமாக நிலக்கரி வெட்டியெடுத்து களவில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில், அந்த மாநிலத்தைச் சோ்ந்த திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானா்ஜியின் மனைவி ருஜிரா, ருஜிராவின் சகோதரி மேனகா கம்பீா் ஆகியோரிடம் சிபிஐ சமீபத்தில் விசாரணை நடத்தியது.

மேனகா கம்பீரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வழக்கு தொடா்பாக தனக்கு ஒன்றும் தெரியாது என்றும், தனது கணவருக்கும் மாமனாருக்கும்தான் நடந்தவை குறித்து தெரியும் என்றும் கூறினாா்.

இதையடுத்து அவரின் கணவா் அங்குஷ் அரோரா, அவரின் தந்தை பவன் அரோரா ஆகியோரிடம் விசாரணை நடத்த அவா்களை வரும் 15-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது என்றனா்.

சட்ட விரோதமாக நிலக்கரி வெட்டியெடுத்த வழக்கில் பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் நிலையில், அந்த வருவாயில் குறிப்பிட்ட பகுதி இடைத்தரகா்கள் மூலம் சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com