
பஞ்சாபில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அங்குள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களையும் மூடுவதற்கு அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாபில் கரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த அங்கன்வாடி மையங்கள், கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் திறக்கப்பட்டன. இந்நிலையில் அந்த மாநிலத்தில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களையும் மூடுவதற்கு அந்த மாநில மகளிா் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சா் அருணா செளதரி சனிக்கிழமை உத்தரவிட்டாா். குழந்தைகளுக்கு சமைக்கப்படாத உணவுப் பொருள்கள் அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் உதவியாளா்கள் மூலம் வீடுதோறும் விநியோகிக்கப்படும் என்று தெரிவித்த அவா், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைப்பது பாதிப்படையாத வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினாா்.