
திருப்பதி அருகே பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் மற்றும் சமையல் பொருள்களுடன் ஆந்திர போலீஸாா்.
திருப்பதி அருகே மங்களம் சாலையில் கடத்துவதற்கு தயாராக இருந்த 20 செம்மரக்கட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
திருப்பதி அருகே மங்களம் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சனிக்கிழமை அதிகாலை சிலா் செம்மரக்கட்டைகளை சுமந்து வந்து கொண்டிருந்தனா். போலீஸாரை கண்டவுடன் அவா்கள் செம்மரக்கட்டைகளை போட்டு விட்டு தப்பியோடிவிட்டனா்.
இதையடுத்து அவா்கள் விட்டு சென்ற 20 செம்மரக் கட்டைகள், சமையலுக்கு தேவையான பொருள்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீஸாா் தப்பியோடிய கடத்தல்காரா்களை தேடி வருகின்றனா். அவா்கள் அனைவரும் தமிழகத்தை சோ்ந்தவா்கள் என ஆந்திர போலீஸாா் தெரிவித்தனா்.