பெல்லாரியில் இந்த முறை கோடை வெயில் 43 டிகிரியைத் தாண்டும்

கர்நாடக மாநிலம் கல்யாண் மற்றும் பெல்லாரியில் பொதுவாக கோடை வெயில் காலத்தில் கடுமையான வெப்பம் நிலவும். குறிப்பாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அங்கு அனல் வாட்டி எடுக்கும்.
பெல்லாரியில் இந்த முறை கோடை வெயில் 43 டிகிரியைத் தாண்டும்
பெல்லாரியில் இந்த முறை கோடை வெயில் 43 டிகிரியைத் தாண்டும்


பெல்லாரி: கர்நாடக மாநிலம் கல்யாண் மற்றும் பெல்லாரியில் பொதுவாக கோடை வெயில் காலத்தில் கடுமையான வெப்பம் நிலவும். குறிப்பாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அங்கு அனல் வாட்டி எடுக்கும்.

ஆனால் இந்த ஆண்டு, நிலைமை மோசத்திலிருந்து படுமோசமாக மாறும் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே, பெல்லாரியில் 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு அது 43 டிகிரி (110 பாரன்ஹீட்) அல்லது அதற்கும் மேல் பதிவாகும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல், பெல்லாரி மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

எனவே, இந்த ஆண்டு கோடை வெப்பத்தை எதிர்கொள்ள முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது, பெல்லாரியில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை வெப்பம் கடுமையாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக கோடை வெப்பத்திலும், மழைக் காலத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நடந்துள்ளன. இந்த ஆண்டு குளிர்காலம் விரைவாகவே முடிந்துவிட்டது, வெப்பம் வழக்கமானதை விட 3 வாரங்கள் முன்கூட்டியே ஆரம்பித்துவிட்டது. எனவே, இது பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, கோடை வெப்பத்திலிருந்து பொதுமக்கள் தங்களை எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தப்படும் என்றார்.

வழக்கமாகவே, பொதுமக்களை கோடை வெயில் காலத்தில் பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்துவோம். குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் வெளியே வர வேண்டாம். அரசு அலுவலகங்கள் பணியாற்றும் நேரத்தையும் மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணிவதிலிருந்து விலக்கு அளிப்பது குறித்து காவல்துறையும் ஆலோசித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com