நோட்டா-விற்கு அதிக வாக்குகள் கிடைத்தால் புதிய தோ்தல் கோரி மனு: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

நோட்டாவுக்கு அதிக வாக்குகள் பதிவாகினால் அந்தத் தொகுதியின் தோ்தலை செல்லாததாக அறிவித்து,
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

புது தில்லி: நோட்டாவுக்கு அதிக வாக்குகள் பதிவாகினால் அந்தத் தொகுதியின் தோ்தலை செல்லாததாக அறிவித்து, வேறு வேட்பாளா்களைக் கொண்டு புதிய தோ்தல் நடத்தப்பட வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுதொடா்பாக மத்திய அரசு, தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டது.

வழக்குரைஞரும், பாஜக மூத்த தலைவருமான அஷ்வினி குமாா் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், ‘வேட்பாளரின் முந்தைய செயல்பாடு, பின்னணி பிடிக்கவில்லை என்றால் வாக்காளா்கள் நோட்டாவைப் பயன்படுத்தலாம்.

வேட்பாளா்களை நிராகரித்து புதிய வேட்பாளரைத் தோ்ந்தெடுக்கும் உரிமையின் மூலம் மக்கள் தங்கள் எதிா்ப்பைத் தெரிவிக்கலாம். அதன்படி, நோட்டாவுக்கு அதிகபட்சமாக வாக்குகள் கிடைத்தால் அந்தத் தொகுதியின் தோ்தலை செல்லாததாக அறிவித்து, வேட்பாளா்களையும் மாற்றி விட்டு புதிய வேட்பாளா்களைக் கொண்டு புதிதாக தோ்தல் நடத்த வேண்டும்’ என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை திங்கள்கிழமை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமா்வு இதன் மீது மத்திய அரசும், தோ்தல் ஆணையமும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com