உலகின் மிகவும் மாசடைந்த 30 நகரங்களில் 22 இந்திய நகரங்கள்!

உலகின் மிகவும் மாசடைந்த 30 நகரங்களில் 22 நகரங்கள் இந்தியாவில் இருப்பதாக சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐ.கியூ.ஏர் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
உலகின் மிகவும் மாசடைந்த 30 நகரங்களில் 22 இந்திய நகரங்கள்!
உலகின் மிகவும் மாசடைந்த 30 நகரங்களில் 22 இந்திய நகரங்கள்!

புதுதில்லி: உலகின் மிகவும் மாசடைந்த 30 நகரங்களில் 22 நகரங்கள் இந்தியாவில் இருப்பதாக சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐ ஐகியூஏர் விஷுவல் நிறுவனம் என்ற நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் காற்று மாசு ஒரு கடுமையாக சுகாதாரப் பிரச்னையாக உள்ளது. உலகின் மிகவும் மோசமான மாசுபட்ட 30 நகரங்களில் 22 நகரங்கள் இந்தியாவில் உள்ளது என்பதுதான் வேதனையான செய்தி. 

உலகின் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்யும் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஐ ஐகியூஏர் விஷுவல் நிறுவனம் 'உலக காற்றின் தர அறிக்கை, 2020' என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதன் விவரம்: உலகில் உள்ள நாடுகளில் உள்ள 106 முக்கிய நகரங்களில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ததில், "மிகவும் மாசடைந்த  நகரங்களின் தரவரிசையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது, உலகளவில் மிகவும் மாசுபட்ட முதல் 30 நகரங்களில் 22 இடங்கள் உள்ளன." அதிக மாசடைந்த நகரங்களில் சீனாவில் சின்ஜியாங் மற்றும் ஒன்பது இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலகிலேயே மிகவும் மாசடைந்த நகரங்களில் 10 ஆவது மாசுபட்ட நகரமாக இந்தியாவின் தலைநகர் தில்லி திகழ்கிறது. 2019 முதல் 2020 வரை தில்லியின் காற்றின் தரம் ஏறக்குறைய 15 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகின் இரண்டாவது மாசுபட்ட நகரமாக காசியாபாத் உள்ளது என்று அறிக்கை கூறப்பட்டுள்ளது.  

இதனைத் தொடர்ந்து மாசடைந்த நகங்களில் பட்டியலில், காசிதாபாத், புலந்த்சஹார், பிஸ்ராக் ஜலாபூர், நொய்டா, கிரேட்டர் நொய்டா, கான்பூர், லக்னௌ, மீரத், ஆக்ரா மற்றும் உத்தரப்பிரேசத்தில் முசாபர் நகர், ராஜஸ்தானில் பிவாரி, பரிதாபாத், ஜிந்த், ஹிஸார், ஃபதேபாத், பந்த்வாரி, குருகிராம், யமுனா நகர், ஹரியானாவில் ரோஹ்டக் மற்றும் தாருஹேரா, பிகாரில் முசாபர்பூர் ஆகிய நகங்கள் இடம் பெற்றுள்ளன. 

வாகன போக்குவரத்து, உணவிற்காக விறகுகளை எரிப்பது, மின்சார உற்பத்தி, தொழிற்சாலைகள், கட்டுமானம், குப்பைகளை எரித்தல், விவசாயக் கழிவுகளை எரித்தல் போன்றவை காற்று மாசுபாட்டிற்கு முக்கியக் காரணங்களாக உள்ளன.

அதிக அளவு மாசை வெளியிடுவதில் வாகன போக்குவரத்துத் முக்கிய அம்சமாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து சுற்றுச்சூழல் நலப் பணிகளை மேற்கொண்டு வரும், 'கிரீன்பீஸ் இந்தியா' என்ற தனியார் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த அவினாஷ் சன்சால் தெரிவித்ததாவது, 'கரோனா பொதுமுடக்கத்தில் தில்லி உள்பட பல்வேறு நகரங்களில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளது. எனினும் சுற்றுச்சூழல் மாசுபாடு, அதனால் ஏற்படும் பாதிப்புகளில் எந்த முன்னேற்றமும் இல்லை.

சுற்றுச்சூழலை மாசடைய செய்யும் ஆற்றல் மூலங்களை காப்பதில் அரசு நிலையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். காற்றில் உள்ள கார்பன் அளவை குறைக்கும் வகையில், வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு எதிரான நடவடிக்கைகளை இயக்கமாக ஊக்குவிக்க வேண்டும். முடிந்தவரை நடந்து செல்வது, சைக்கிள் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். 

இது வாழ்நாள்களை காப்பதோடு மட்டுமல்லாமல், ஆரோக்கியமின்மைக்காக செலவிடும் பெரும் தொகையினையும் சேமிக்க உதவுகிறது' என்று அவர் கூறினார்.

மனித செயல்பாடுகளால் 2021 ஆம் ஆண்டில் காற்று மாசுபாடு அதிகரித்து இருப்பதை மீண்டும் காண முடிகிறது. காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கு அவசர நடவடிக்கை சாத்தியமானது மற்றும் அவசியமானது என்பதை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுவதாக நாங்கள் நம்புகிறோம். இது உலகின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் சுகாதார அச்சுறுத்தலாக உள்ளது, "என்று  ஐ ஐகியூஏர் விஷுவல் நிறுவனம் தலைமை நிர்வாக அதிகாரி பிராங்க் ஹேம்ஸ் கூறியுள்ளார்.

இந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த எந்த நகரமும் இடம்பெறவில்லை என்பது ஆறுதலுக்குரிய செய்தியாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com