நாட்டில் இரண்டாவது கரோனா அலைக்கான சாத்தியங்கள்

நாட்டில் இரண்டாவது கரோனா தொற்றுப் பரவல் அலைக்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாகவேக் கூறப்படுகிறது.
நாட்டில் இரண்டாவது கரோனா அலைக்கான சாத்தியங்கள்
நாட்டில் இரண்டாவது கரோனா அலைக்கான சாத்தியங்கள்


புது தில்லி: நாட்டில் இரண்டாவது கரோனா தொற்றுப் பரவல் அலைக்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாகவேக் கூறப்படுகிறது. அதாவது, ஒட்டுமொத்த கரோனா நோயாளிகளில் 85 சதவீதம் பேர் வெறும் 8 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது கடும் அதிர்ச்சித் தரும் தகவலாக உள்ளது.

கடந்த ஆண்டு கரோனா தொற்றுப் பரவல் கடுமையாக அதிகரித்து பேரிடரை ஏற்படுத்திய நிலையில், ஜனவரி முதல் இரண்டு மாத காலம் மெல்ல படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால், அந்த நிலை தற்போது மாறி, மீண்டும் இரண்டாவது அலை வீசுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாகவே கருதப்படுகிறது.

ஆரம்பத்தில் மகாராஷ்டிரம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் மட்டுமே கரோனா அதிகரித்து வந்தது. ஏனெனில் பெரும்பாலான கரோனா நோயாளிகள் இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். ஆனால், தற்போது நாட்டில் கரோனா  நோயாளிகளில் 85 சதவீதம் பேர் வெறும் 8 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் தமிழகமும் ஒன்று.

ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் கரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், மார்ச் மாதத் தொடக்கம் முதலே கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மார்ச் இரண்டாம் வாரத்தில் நாட்டில் கரோனா பாதித்து சிகிச்சையிலிருப்போரின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது அது 2.34 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுவே இரண்டாம் அலைக்கான ஆரம்பமாகவும் கருதப்படுகிறது. 

 அதுபோலவே, கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அதாவது மார்ச் 11-ஆம் தேதி முதல் நாள்தோறும் புதிதாக கரோனா உறுதி செய்யப்படுவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் மேல் இருந்ததோடு, இந்த 2021-ஆம் ஆண்டிலேயே அதிகபட்சமாக 28,903 பேருக்கு இன்று கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 17,864 பேர் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்கள். அதுபோலவே கரோனாவுக்கு பலியான 188 பேரில் 87 பேர் மகாராஷ்டிரத்தையும், 38 பேர் பஞ்சாப் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள்.

மகாராஷ்டிரம், பஞ்சாப் மாநிலங்களைத் தொடர்ந்து கர்நாடகம், குஜராத், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது, இந்த பாதிப்பு 78 சதவீதமாகும்.

குறிப்பாக நாட்டில் மகாராஷ்டிரம், தமிழகம், பஞ்சாப், மத்தியப் பிரதேசம், தில்லி, குஜராத், கர்நாடகம், ஹரியாணா ஆகிய 8 மாநிலங்களில் கரோனா பரவல் அதிகரித்த வருவது கண்கூடாகத் தெரிகிறது.

நாட்டில் என்று மட்டுமல்லாமல், சென்னையில் புதன்கிழமை காலை நிலவரப்படி கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 2,100ஐ எட்டிவிட்டது. தமிழகத்திலும் ஐந்து ஆயிரமாக அதிகரித்துள்ளது நினைவில் கொள்ளத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com