நாடுமுழுவதும் ரத்து செய்யப்பட்ட நான்கு கோடி ரேஷன் அட்டைகள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி

நாடுமுழுவதும் நான்கு கோடி ரேஷன் அட்டைகள் பல்வேறு மாநில அரசுகளால் ரத்து செய்யப்பட்டுள்ள விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது.
நாடுமுழுவதும் நான்கு கோடி ரேஷன் அட்டைகள் பல்வேறு மாநில அரசுகளால் ரத்து செய்யப்பட்டுள்ள விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது.
நாடுமுழுவதும் நான்கு கோடி ரேஷன் அட்டைகள் பல்வேறு மாநில அரசுகளால் ரத்து செய்யப்பட்டுள்ள விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது.

புது தில்லி: நாடுமுழுவதும் நான்கு கோடி ரேஷன் அட்டைகள் பல்வேறு மாநில அரசுகளால் ரத்து செய்யப்பட்டுள்ள விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கொய்லி தேவி என்பவரது 11 வயது மகள் கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 28-ஆம் தேதி மரணமடைந்தார். அவரது குடும்பத்திற்கான ரேஷன் அட்டையையானது ஆதார் அட்டையுடன் இணைக்கப்படாத காரணத்தால் அதிகாரிகளால் ரத்து செய்யப்பட்டதாகவும், இதன்காரணமாக அந்தச் சிறுமி உண்ணுவதற்கு உணவின்றி மரணமடைந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்த சம்பவம் நாடுமுழுவதும்  அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து கொய்லி தேவி 2018- ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார். அதில், 'ஆதார் அட்டையுடன் இணைக்கப்படாத காரணத்தினால் நாடுமுழுவதும் நான்கு கோடி ரேஷன் அட்டைகள் பல்வேறு மாநில அரசுகளால் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து அரசுகள் உரிய விளக்கம் அளிக்கவும்' கோரியிருந்தார். அத்துடன் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி இதற்கென சரியான முறையில் குறைதீர் அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை என்றும், அவர் குற்றம் சாட்டியிருந்தார்.  

இந்த மனுவானது உச்ச நீதிமன்றத்த தலைமை நீதிபதி பாப்டே தலைமையில், நீதிபதிகள் போபண்ணா மற்றும் ராமசுப்பிரமணியன் அடங்கிய அமர்வின் முன் விசாராணைக்கு வந்தது

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜராகிய மூத்த  வழக்கறிஞர் கோலின் கன்சால்வேஸ் கூறுகையில் , 'பல்வேறு மாநிலங்களின் அளவில் மூன்று கோடி ரேஷன் அட்டைகளும், 10 முதல் 15 லட்சம் வரையிலான ரேஷன் அட்டைகள் மாவட்ட அளவிலும் ரத்து   செய்யப்பட்டுள்ளன.

ரேஷன் அட்டையினை ஆதார் அட்டையுடன் இணைக்கும் தொழில்நுட்பமானது கருவிழி அடையாளம், விரல் ரேகைகள்,  ஆதார் அட்டையினை வைத்திருத்தல் மற்றும் கிராம மற்றும் ஊர்கப் பகுதிகளில் இணைய சேவை என பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. இதன்காரணமாக எழும் நடைமுறைச் சிக்கல்களால் சம்பந்தப்பட்ட குடும்பத்தாருக்குத் தெரியாமல் ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது' என்று குற்றம் சாட்டினார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான  கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அமன் லேகி, 'இந்த மனு தவறான தகவல்களை நீதிமன்றத்திற்குத் தந்துள்ளதாகவும், உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி இதற்கு என தனியாக குறைதீர் நடைமுறைகள் உள்ளதாகவும்' தெரிவித்தார். அத்துடன் ஆதார் இல்லாவிட்டாலும் சம்பந்தப்பட்டவர்கள் மாற்று ஆவணங்களை சமர்ப்பிக்கலாம் என்றும், ஆதார் இருந்தாலும் இல்லவிட்டாலும் ஓருவருக்கான உணவு உரிமை மறுக்கப்படாது என்று தங்கள் முன்னரே தெரிவித்துள்ளதையும் சுட்டிக் காட்டினார்    

இருதரப்பு வாதங்களைக் கேட்ட அமர்வானது, இந்த விவகாரம் மிகவும் தீவிரமானது என்றும், நாங்கள் இதனை விசாரித்தே  ஆக வேண்டும்' என்றும் தெரிவித்தது.

அத்துடன் நான்கு வாரங்களுக்குள் உரிய விளக்கம் அளிக்குமாறு கோரி மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com