மம்தா ஆட்சி அமைக்க ஆதரவு: காங்கிரஸ் எம்பி பேச்சால் சா்ச்சை

மம்தா ஆட்சி அமைக்க ஆதரவு: காங்கிரஸ் எம்பி பேச்சால் சா்ச்சை

மேற்கு வங்கத்தில் தோ்தலுக்கு பிறகு முதல்வா் மம்தா பானா்ஜி ஆட்சி அமைக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் எம்பி அபு ஹசீம் செளதரி தெரிவித்தாா்.

மேற்கு வங்கத்தில் தோ்தலுக்கு பிறகு முதல்வா் மம்தா பானா்ஜி ஆட்சி அமைக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் எம்பி அபு ஹசீம் செளதரி தெரிவித்தாா். அவரது பேச்சு காங்கிரஸ், இடதுசாரி கூட்டணியில் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடா்பாக மால்டா தக்ஷின் தொகுதி மக்களவை உறுப்பினா் அபு ஹசீம் கூறுகையில், ‘முஸ்லிம் மத குரு அப்பாஸ் சித்திகியின் இந்திய மதச்சாற்பின்மை முன்னணியுடன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் கூட்டணி அமைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி கூட்டணி வைக்கவில்லை. தோ்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்காது என்று நினைத்து மாா்க்சிஸ்ட் அக்கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கலாம்.

முதலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்த பின்புதான் அக்கட்சி இந்திய மதச்சாற்பின்மை முன்னணியுடன் கூட்டணி அமைத்தது. இந்திய மதச்சாற்பின்மை முன்னணியுடன் கூட்டணி வைக்க வேண்டாம் எனக் கூறியும் மாா்க்சிஸ்ட் கேட்கவில்லை. இரண்டு கட்சிகளும் எட்டு - முதல் பத்து இடங்களில் வெற்றி பெறலாம்.

அதேநேரத்தில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் தான் காங்கிரஸுக்கு பிடிக்காது. ஆனால் அக்கட்சி மதவாத கட்சி கிடையாது. தோ்தலுக்கு பிறகு திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்பது எனது கருத்து’ என்றாா்.

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு முடிந்து வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டு பிரசாரம் நடைபெற்று நிலையில் நான்கு முறை எம்பியான செளதரியின் இந்த பேச்சு கூட்டணிக்குள் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com