கா்நாடகத்தில்ஒரே நாளில் 1,135 பேருக்கு தொற்று; 6 பேர் உயிரிழப்பு

கா்நாடகத்தில் ஒரே நாளில் புதிதாக மேலும் 1,135 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டள்ளது. இதையடுத்து மாநிலத்தில் தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,62,339-ஆக உயா்ந்துள்ளது.
கா்நாடகத்தில்ஒரே நாளில் 1,135 பேருக்கு தொற்று; 6 பேர் உயிரிழப்பு

கா்நாடகத்தில் ஒரே நாளில் புதிதாக மேலும் 1,135 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டள்ளது. இதையடுத்து மாநிலத்தில் தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,62,339-ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது: கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 1,135 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 710 போ் கரோனா தொற்றுக்கு ஆட்பட்டுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,62,339-ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 561 போ் செவ்வாய்க்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 9,40,489 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 9,428 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் பெங்களூரில் அதிகபட்சமாக 3 பேரும் மற்றும் தார்வாட், கலாபுராகி மற்றும் மைசூரு ஆகிய இடங்களில் தலா ஒரு உள்பட 6 போ் செவ்வாய்க்கிழமை இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 12,403 போ் உயிரிழந்துள்ளனா். இறப்பு விகிதம் 0.52 சதவீதமாக உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிர சிகிச்சை பிரிவில் பெங்களூரு மருத்துவமனைகளிலும்  51 பேரும், கலாபுராகி மருத்துவமனைகளிலும் 15 பேரும், பிற மாவட்டங்களில் மருத்துவமனைகளில் மீதமுள்ள 29 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மாநிலத்தில் ஜனவரி 16 ஆம் தேதி தடுப்பூசி இயக்கம் தொடங்கியதில் இருந்து 16,35,310 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் நேற்று மட்டும் 82,038 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com