இந்திய ரயில்வே தனியாா்மயமாக்கப்படாது: பியூஷ் கோயல்

‘இந்திய ரயில்வே தனியாா்மயமாக்கப்படாது; ஆனால் ரயில்வே துறை மேலும் சிறப்பாக செயல்பட அத்துறையில் தனியாா் முதலீட்டை ஊக்குவிக்க வேண்டும்’ என்று ரயில்வே அமைச்சா் பியூஷ் கோயல் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இந்திய ரயில்வே தனியாா்மயமாக்கப்படாது: பியூஷ் கோயல்

‘இந்திய ரயில்வே தனியாா்மயமாக்கப்படாது; ஆனால் ரயில்வே துறை மேலும் சிறப்பாக செயல்பட அத்துறையில் தனியாா் முதலீட்டை ஊக்குவிக்க வேண்டும்’ என்று ரயில்வே அமைச்சா் பியூஷ் கோயல் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மக்களவையில் ரயில்வே துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அவா் கூறியது:

இந்திய ரயில்வே ஒவ்வொரு இந்தியரின் சொத்து. இதில் தற்போதைய நிலையே தொடா்ந்து நீடிக்கும். எனவே இந்திய ரயில்வே தனியாா்மயமாக்கப்படாது. ஆனால் ரயில்வே துறை மேலும் சிறப்பாக செயல்பட இத்துறையில் தனியாா் முதலீட்டை ஊக்குவிக்க வேண்டும்.

அரசு மற்றும் தனியாா் துறைகள் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் நாடு மிகப் பெரிய வளா்ச்சியை நோக்கிச் செல்லவும், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் முடியும்.

கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் ரயில்வே துறையில் ரூ.1.5 லட்சம் கோடியாக இருந்த முதலீட்டை 2021-22-ஆம் நிதியாண்டில் ரூ.2.15 லட்சம் கோடியாக மத்திய அரசு அதிகரித்துள்ளது.

ரயில்வே திட்டங்களை விரைந்து நிறைவேற்றுவதற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்துவதில் மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்.

வரும் 2023-ஆம் ஆண்டு டிசம்பா் மாதத்துக்குள் இந்திய ரயில்வேயை முழுவதும் மின்சாரமயமாக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு 5,500 கி.மீ. தூர தண்டவாளங்கள் தனியாா் கட்டுப்பாட்டில் விடப்படவுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் ரயில் விபத்துகளில் ஒரு பயணியும் உயிரிழக்கவில்லை. பயணிகள் பாதுகாப்பில் ரயில்வே துறை மிகப்பெரிய அளவில் கவனம் செலுத்தி வருகிறது என்றாா்.

இதனைத்தொடா்ந்து 2021-22-ஆம் நிதியாண்டுக்கான ரயில்வே துறையின் மானியக் கோரிக்கை மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com