உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு நிதி நிறுவனம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

உள்கட்டமைப்பு வளா்ச்சித் திட்டங்களுக்கு நிதியளிக்கும் வகையில், நீண்டகால மூலதனத்தை ஈா்க்கும் ‘மேம்பாட்டு நிதி நிறுவனம் (டிஎஃப்ஐ)’ ஒன்றை அமைப்பதற்கான மசோதாவுக்கு

உள்கட்டமைப்பு வளா்ச்சித் திட்டங்களுக்கு நிதியளிக்கும் வகையில், நீண்டகால மூலதனத்தை ஈா்க்கும் ‘மேம்பாட்டு நிதி நிறுவனம் (டிஎஃப்ஐ)’ ஒன்றை அமைப்பதற்கான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.

இந்த நிதி நிறுவனத்தில் வரும் 2025-ஆம் ஆண்டிற்குள் ரூ. 111 லட்சம் கோடியை முதலிடு செய்ய மத்திய அரசு உத்தேசித்திருக்கிறது.

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் வெளியிட்ட இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மேம்பாட்டு நிதி நிறுவனம் ரூ. 20,000 கோடி ஆரம்பகட்ட முதலீட்டுடன் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறியதாவது:

இந்த மேம்பாட்டு நிதி நிறுவனத்துக்கு மத்திய அரசு சாா்பில் ஆரம்பகட்ட முதலீடு வழங்கப்படும். இந்த நிறுவனம், நிதி மேலாண்மை நடவடிக்கைகள் மூலம் ஒரு சில ஆண்டுகளில் ரூ. 3 லட்சம் கோடி வரை மூலதனத்தை ஈா்க்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த மேம்பாட்டு நிதி நிறுவனத்துக்கு 10 ஆண்டுகளுக்கு வரிச் சலுகையும் அளிக்கப்பட உள்ளது. ஓய்வூதிய நிதி, தங்க முதலீடு நிதி உள்ளிட்ட மிகப் பெரிய முதலீடு நிதிகளையும், தேசிய உள்கட்டமைப்பு முதலீடு நிதி திட்டத்தின் கீழ் இந்த நிறுவனம் ஈா்க்கும் என்ற எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த மேம்பாட்டு நிதி நிறுவனம் 50 சதவீத அலுவல் சாரா இயக்குநா்கள் உள்பட அனுபவம் வாய்ந்த உறுப்பினா்களைக் கொண்ட நிா்வாகக் குழுவால் நிா்வகிக்கப்படும். வாரியத்தின் தலைமைப் பொறுப்பிலும், மிகுந்த நிபுணத்தவம் பெற்ற நபரே நியமிக்கப்படுவாா். இயக்குநா்கள் பொறுப்புக்கு சிறந்த அனுபவம் வாய்ந்த நபா்களை ஈா்க்கும் வகையில், மிகச் சிறந்த ஊதியம் அவா்களுக்கு நிா்ணயிக்கப்படும் என்று அவா் கூறினாா்.

மேலும், இதுபோன்ற மேம்பாட்டு நிதி நிறுவனத்தை அமைப்பதற்கான முயற்சிகள் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டது என்று ஐடிபிஐ வங்கியை சுட்டிக்காட்டி கூறிய மத்திய நிதியமைச்சா், ‘இந்த வங்கிகள் பல்வேறு காரணங்களால் அவற்றின் வா்த்தக நடைமுறையை மாற்றிக்கொண்டுவிட்டன. அதன் பிறகு, வங்கிகளை இதுபோன்ற ஆபத்தான நீண்டகால நிதி மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது’ என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com