"ரயில்வே திட்டங்களில் தமிழகம் புறக்கணிப்பு '

தமிழகத்தின் பெரும்பான்மை ரயில்வே திட்டங்களை மத்திய அரசு புறக்கணித்துவிட்டதாக மக்களவையில் தருமபுரி தொகுதி உறுப்பினர் டி. என்.வி.செந்தில்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தின் பெரும்பான்மை ரயில்வே திட்டங்களை மத்திய அரசு புறக்கணித்துவிட்டதாக மக்களவையில் தருமபுரி தொகுதி உறுப்பினர் டி. என்.வி.செந்தில்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
 மக்களவையில் ரயில்வே துறை மீதான மானியக் கோரிக்கைகள் விவாதத்தின்போது அவர் கூறியதாவது:
 தமிழகத்தில் 10 ரயில் பாதைத் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று மத்திய ரயில்வே துறை உறுதி அளித்திருந்தது. அதில், முக்கியமானது சென்னை மாமல்லபுரம் - கடலூர் ரயில் பாதை திட்டம், திண்டிவனம்-நகரி இடையே விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் , சித்தூர் ஆகிய நகரங்களை இணைக்கும் புதிய ரயில் பாதைத் திட்டம் என தமிழகத்தை முன்னேற்றச் செய்யும் முக்கிய ரயில் பாதைகளுக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்தத் திட்டங்களில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாமல் முடக்கப்பட்டுள்ளது.
 மேலும், தருமபுரி ரயில் நிலையத்துக்கு வரும் ரயில்கள் அனைத்தும் 2-ஆவது நடைமேடையில் நிறுத்தப்படுகின்றன. பொதுமக்கள் வசதிக்காக நடைமேடை ஒன்றில் நிறுத்தப்பட வேண்டும் அல்லது தானியங்கி படி அமைத்துத் தர வேண்டும் என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com