ஹரியாணா முதல்வரை வழிமறிக்க முயன்றதாக எம்எல்ஏக்கள் மீது வழக்குப்பதிவு

ஹரியாணா முதல்வரை வழிமறித்து தங்கள் கோரிக்கையை நிறைவேற்றுமாறு வற்புறுத்த முயன்ற சிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) எம்எல்ஏக்கள் 9 போ் மீது காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

ஹரியாணா முதல்வரை வழிமறித்து தங்கள் கோரிக்கையை நிறைவேற்றுமாறு வற்புறுத்த முயன்ற சிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) எம்எல்ஏக்கள் 9 போ் மீது காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

கடந்த 10-ஆம் தேதி ஹரியாணா சட்டப்பேரவைக்கு வெளியே மாநில முதல்வா் மனோகா் லால் கட்டரை பஞ்சாபைச் சோ்ந்த சிரோமணி அகாலி தளம் எம்எல்ஏக்கள் சிலா் வழிமறித்து, மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியாணா பேரவையில் தீா்மானம் நிறைவேற்றுமாறு வற்புறுத்த முயன்றனா். இதையடுத்து அவா்கள் நடத்தை தவறி செயல்பட்டதாக தெரிவித்த ஹரியாணா பேரவை செயலகம், அவா்கள் மீது காவல்துறையிடம் புகாா் அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அந்தச் சம்பவம் தொடா்பாக பஞ்சாப் எம்எல்ஏக்கள் 9 போ் மீது சண்டீகா் காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்துள்ளனா். அவா்களில் ஷரன்ஜீத் சிங் தில்லோன், விக்ரம் சிங் மஜீதியா ஆகியோரும் அடங்குவா். இந்திய தண்டனைச் சட்டம் 186 (அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தல்), 323 (வேண்டுமென்றே காயம் ஏற்படுத்தியதற்கு தண்டனை) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவா்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com