அஸ்ஸாம் முதல் கட்ட தேர்தல்: 16% வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு

அஸ்ஸாம் சட்டப் பேரவைக்கான முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 16 சதவீதம் பேர் தங்கள்மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக வேட்புமனு தாக்கலின்போது தெரிவித்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


புது தில்லி: அஸ்ஸாம் சட்டப் பேரவைக்கான முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 16 சதவீதம் பேர் தங்கள்மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக வேட்புமனு தாக்கலின்போது தெரிவித்துள்ளனர்.
126 தொகுதிகளைக் கொண்ட அஸ்ஸாம் சட்டப் பேரவையில் முதல் கட்டமாக 47 தொகுதிகளுக்கு வரும் 27-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்ட தேர்தலில் போட்டியிட 264 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அவற்றில், 259 பேரின் வேட்புமனுக்களை "அசோசியேஷன் ஃபார் டெமாக்ரடிக் ரிஃபார்ம்ஸ்' (ஏடிஆர்) என்ற அமைப்பும், அஸ்ஸாம் தேர்தல் கண்காணிப்பகமும் இணைந்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
259 வேட்பாளர்களில் 41 பேர்(16 சதவீதம்) தங்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். கட்சி அடிப்படையில், காங்கிரஸ் வேட்பாளர்கள் 10 பேர், அஸ்ஸாம் ஜாதிய பரிஷத் வேட்பாளர்கள் 8 பேர், பாஜக வேட்பாளர்கள் 3 பேர், தேசியவாத காங்கிரஸ், ஏஜிபி, எஸ்.யு.சி.ஐ(சி) வேட்பாளர் தலா ஒருவர் ஆவர்.
34 பேர் (13 சதவீதம்) தங்கள் மீது மிகத்தீவிரமான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
259 வேட்பாளர்களில் 97 பேர் (37 சதவீதம்) 5 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்துள்ளனர். 157 பேர் (61 சதவீதம்) பட்டதாரிகள். 4 பேர் டிப்ளோமா படித்துள்ளனர். ஒருவர் எழுதப்படிக்க மட்டும் தெரியும் என்று தெரிவித்துள்ளார்.
38 வேட்பாளர்கள் (15 சதவீதம்) 61 வயது முதல் 70 வயதுக்கு உள்பட்டவர்கள். ஒருவர் 85 வயது வேட்பாளர்.
மொத்தமுள்ள 259 வேட்பாளர்களில் 101 பேர் (39 சதவீதம்) கோடீஸ்வரர்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com