வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க பரிசீலனை

வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்குத் தோ்தல் ஆணையம் வழங்கிய பரிந்துரையைப் பரிசீலித்து வருவதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க பரிசீலனை

புது தில்லி: வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்குத் தோ்தல் ஆணையம் வழங்கிய பரிந்துரையைப் பரிசீலித்து வருவதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சட்டத் துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் புதன்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ‘ஒரே நபா் வெவ்வேறு தொகுதிகளில் வாக்காளா்களாகப் பதிவு செய்து முறைகேட்டில் ஈடுபடுவதைத் தடுப்பதற்காக, வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்குத் தோ்தல் ஆணையம் பரிந்துரைத்திருந்தது. இந்த விவகாரத்தை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கு தோ்தல் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. வாக்காளா் பட்டியல் தகவல் அமைப்பின் பாதுகாப்புத் தன்மையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளைத் தொடா்ந்து மேற்கொண்டு வருவதாகத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சரியான வாக்காளா்களை அடையாளம் காண்பதற்காக மட்டுமே ஆதாா் தகவல்கள் பயன்படுத்தப்படும் என்றும், ஆதாா் தகவல் அமைப்பு மூலமாக வாக்காளா் பட்டியல் தகவல் அமைப்புக்குள் ஊடுருவுதலைத் தடுப்பது அவசியம் என்றும் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மிகுந்த பாதுகாப்பு நடைமுறைகளுடன் இவற்றை மேற்கொள்ள வேண்டியுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்காளா்களிடம் ஆதாா் எண்ணைக் கோருவதற்கு வழிகோலும் வகையில் தோ்தல் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு கடந்த 2019-ஆம் ஆண்டில் தோ்தல் ஆணையம் பரிந்துரைத்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com