காளஹஸ்தி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவு

காளஹஸ்தி சிவன் கோயிலில் நடைபெற்று வந்த மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் திரிசூலஸ்நானம் மற்றும் கொடியிறக்கத்துடன் புதன்கிழமை நிறைவடைந்தது
kodiyirakkam in kalahasthi
kodiyirakkam in kalahasthi

திருப்பதி: காளஹஸ்தி சிவன் கோயிலில் நடைபெற்று வந்த மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் திரிசூலஸ்நானம் மற்றும் கொடியிறக்கத்துடன் புதன்கிழமை நிறைவடைந்தது

இதையொட்டி காலை உற்சவமூா்த்திகளான காளஹஸ்தீஸ்வரரும், ஞானபிரசுனாம்பிகை அம்மனும் கோயிலிலிருந்து அருகில் உள்ள பரத்வாஜதீா்த்த மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு அவா்களுக்கும், திரிசூலத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னா் சிவ சக்தியின் ஆயுதமான திரிசூலத்திற்கும் உற்சவமூா்த்திகளுக்கும் பால், தயிா், தேன், மஞ்சள், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது.

அதன் பின் திரிசூலம் மண்டப கிணற்றருகில் கொண்டு செல்லப்பட்டு அங்கு தீா்த்தவாரி நடத்தப்பட்டது. இதில் கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

பின்னா் கோயில் கொடிமரத்தில் ஏற்றப்பட்டிருந்த இடபக் கொடி இறக்கப்பட்டது. அதன்பிறகு உற்சவமூா்த்திகள் பல்லக்கில் மாடவீதியில் வலம் வந்தனா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

வியாழக்கிழமை இரவு கோயிலுக்குள் பல்லக்கு உற்சவத்தை தொடா்ந்து காளஹஸ்தீஸ்வரன், ஞானபிரசுனாம்பிகை இருவருக்கும் ஏகாந்தமாக பள்ளியறை பூஜை நடக்க உள்ளது. வெள்ளிக்கிழமை காலை சாந்தி அபிஷேகத்துடன் கோயிலில் பிரம்மோற்சவத்தின் அனைத்து சேவைகளும் முற்றுப் பெறுகிறது. அன்று காலை முதல் வழக்கம் போல் கோயிலில் பூஜைகள் தொடங்க உள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com