பாஜகவில் இணைந்த 'தொலைக்காட்சி நாடக' ராமர்!

தொலைக்காட்சியில் ராமர் வேடத்தில் நடித்து புகழ் பெற்ற அருண் கோவில் வியாழனன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
தொலைக்காட்சியில் ராமர் வேடத்தில் நடித்து புகழ் பெற்ற அருண் கோவில் வியாழனன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
தொலைக்காட்சியில் ராமர் வேடத்தில் நடித்து புகழ் பெற்ற அருண் கோவில் வியாழனன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

புது தில்லி: தொலைக்காட்சியில் ராமர் வேடத்தில் நடித்து புகழ் பெற்ற அருண் கோவில் வியாழனன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

1980-களின் பிற்பகுதியில் ராமானந்த் சாகர் இயக்கத்தில் வெளியாகி பெரும்புகழ் பெற்ற  தொடர் ராமாயணம். இதில் ராமன் பாத்திரத்தில் நடித்தவர் அருண் கோவில். நாடகம் முடிவடைந்தாலும் பெரும்பாலானவர் அவரை ராமராக கருதி அவர் செல்லும் இடமெல்லாம் மரியாதை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது    

இந்நிலையில் அருண் கோவில் வியாழனன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் தேசிய பொதுச் செயலர் அர்ஜுன் சிங் மற்றும் மத்திய அமைச்சர் தேபஸ்ரீ சவுத்ரி முன்னிலையில் அக்கட்சியில் அவர் தன்னை இணைத்துக்  கொண்டார்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர். 'பாஜகவில் சேர தனக்கு இப்போதுதான் விதி நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது; சிலர் சில விஷயங்களைபி புரிந்து கொள்வதே இல்லை. மம்தா போன்றோருக்கு ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கூறுவதில் ஒரு ஒவ்வாமை உள்ளது.  கடவுள் ராமர் என்பவர் நமது வழிகாட்டி. ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற கோஷத்திற்கு அவர் காட்டும் எதிர்ப்பே என்னை பாஜகவில் சேர்க்காத தூண்டியது' என்று தெரிவித்துள்ளார்.

கரோனா ஊரடங்கு காலத்தில் ராமாயணம் மீண்டும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட போது அதனை 7.7 கோடி பேர் பாத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com