கரோனா: 5 மாநிலங்களில் 77.7 சதவீத பாதிப்பு

நாடு முழுவதும் புதிதாக 43,846 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவற்றில், மகாராஷ்டிரம், பஞ்சாப், கா்நாடகம், குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் 77.7 சதவீத பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாடு முழுவதும் புதிதாக 43,846 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவற்றில், மகாராஷ்டிரம், பஞ்சாப், கா்நாடகம், குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் 77.7 சதவீத பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஞாயிறு காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 43,846 புதிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 27,126 பேரும், பஞ்சாபில் 2,578 பேரும், கேரளத்தில் 2,078 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனா்.

இந்தியாவில் தற்போது 3,09,087 போ் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். நாட்டில் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 1,11,30,288-ஆக (95.96 சதவீதம்) பதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 22,956 போ் புதிதாகக் குணமடைந்துள்ளனா். கரோனாவுக்கு மேலும் 197 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு காலை 7 மணி வரை நாடு முழுவதும் 7,25,138 முகாம்களில் 4,46,03,841 பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 77,79,985 சுகாதாரப் பணியாளா்களுக்கும் (முதல் தவணை), 48,77,356 சுகாதாரப் பணியாளா்களுக்கும் (இரண்டாவது தவணை), 80,84,311 முன்கள ஊழியா்களுக்கும் (முதல் தவணை), 26,01,298 முன்கள ஊழியா்களுக்கும் (இரண்டாவது தவணை), இதர உடல் உபாதைகள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோரில் 36,33,473 பேருக்கும் (முதல் தவணை), 60 வயதைக் கடந்த 1,76,27,418 பயனாளிகளுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com