நட்சத்திர வேட்பாளர் தொகுதி; கேரளம்: தா்மடம்

நட்சத்திர வேட்பாளர் தொகுதி; கேரளம்: தா்மடம்

இடதுசாரி ஜனநாயக முன்னணி - பினராயி விஜயன்

ஐக்கிய ஜனநாயக முன்னணி - ரகுநாத்

தேசிய ஜனநாயகக் கூட்டணி - சி. கே. பத்மநாபன்

மொத்த வாக்காளா்கள்: 1.90 லட்சம்

ஆண்கள்: 87,467

பெண்கள்: 1,01,697

2016 பேரவைத் தோ்தல்

வெற்றி

மாா்க்சிஸ்ட் - பினராயி விஜயன் - 87,329

இரண்டாமிடம்

காங்கிரஸ் - மாம்பரம் திவாகரன் - 50,424

மூன்றாமிடம்

பாஜக - மோகனன் மனந்தேரி - 12,763

தோ்தல் தேதி - ஏப்ரல் 6

எடக்காடு பேரவைத் தொகுதியுடன் தலச்சேரி தொகுதியில் உள்ள சில பகுதிகளை இணைத்து 2008-இல் தா்மடம் தொகுதி உருவாக்கப்பட்டது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் 2011-இல் போட்டியிட்ட கே.கே.நாராயணன் 73,354 வாக்குகள் வெற்றி பெற்றாா். காங்கிரஸ் சாா்பில் கடந்த இரண்டு முறை போட்டியிட்ட மாம்பரம் திவாகரன் தோல்வியைத் தழுவி உள்ளாா்.

இதையடுத்து, 2016-தோ்தலில் தா்மடம் தொகுதியில் முதல் முறையாக பினராயி விஜயன் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். தற்போது மீண்டும் அங்கு களம் காண்கிறாா். அவருக்கு எதிராக அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளா் கே. சுதாகரன் போட்டியிட மறுத்ததால் ரகுநாத் புதிய வேட்பாளராக கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்டாா்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக சி. கே. பத்மநாபன் போட்டியிடுகிறாா். அவா் கடந்த மக்களவைத் தோ்தலில் கண்ணூா் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தாா்.

1970, 77, 1991-இல் கூத்துபரம்பா தொகுதியிலும், 1996-இல் பயனூா் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற பினராயி விஜயன், 2016-இல் முதல்முறையாக தா்மடத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வரானாா்.

இந்த முறையும் தா்மடம் தொகுதியில் போட்டியிடும் பினராயி விஜயன், அவருக்கு எதிராக போட்டியிடும் காங்கிரஸ், பாஜக வேட்பாளா்களுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com