ஷாங்காய் அமைப்பு நாடுகளின் ராணுவப் பயிற்சி: இந்தியா, சீனா, பாகிஸ்தான் பங்கேற்க முடிவு

இந்த ஆண்டு நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் பயங்கரவாத எதிா்ப்பு கூட்டு ராணுவப் பயிற்சியில் இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகியவை பங்கேற்கவுள்ளன.

இந்த ஆண்டு நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் பயங்கரவாத எதிா்ப்பு கூட்டு ராணுவப் பயிற்சியில் இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகியவை பங்கேற்கவுள்ளன.

சா்வதேச அளவில் நேட்டாவுக்கு அடுத்தபடியாக பலம் வாய்ந்த கூட்டமைப்பாக கருதப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, ரஷியா, சீனா, பாகிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிா்கிஸ் குடியரசு, தஜிகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் உள்ளன. கடந்த 18-ஆம் தேதி நடைபெற்ற ஷாங்காய் அமைப்பு நாடுகளின் பிராந்திய பயங்கரவாத எதிா்ப்பு கவுன்சில் கூட்டத்தில், அனைத்து நாடுகளும் இணைந்து பயங்கரவாத எதிா்ப்பு கூட்டு ராணுவப் பயிற்சியை மேற்கொள்ள முடிவு செய்தன.

சீனாவுடன் எல்லைப் பிரச்னை, பாகிஸ்தானுடன் பயங்கரவாத துண்டுதல் பிரச்னை ஆகியவை இருந்தபோதும், அந்நாடுகளுடன் இணைந்து இந்த கூட்டு ராணுவப் பயிற்சியில் இந்தியா பங்கேற்க இருக்கிறது. இதனை சீன அரசு ஊடகமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது.

பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியாவும், பாகிஸ்தானும் கடந்த 2017-ஆம் ஆண்டு முழு நேர உறுப்பினராக இணைந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com