சூரத்தில் ஒரேநாளில் 34 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கரோனா பாதிப்பு 

குஜராத்தின் சூரத்தில் ஒரேநாளில் குறைந்தது 34 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
சூரத்தில் ஒரேநாளில் 34 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கரோனா பாதிப்பு 
சூரத்தில் ஒரேநாளில் 34 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கரோனா பாதிப்பு 

குஜராத்தின் சூரத்தில் ஒரேநாளில் குறைந்தது 34 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

சூரத் நகரத்தில் கரோனா தொற்று அதிகரித்துள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் 429 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளன. 

ஆட்டோரிக்ஷாக்கள், காய்கறி விற்பனையாளர்கள் மற்றும் மளிகை ஓட்டுநர்களுக்கு பெரியளவில் கரோனா பரிசோதனை செய்யப்படுகின்றது. 

கரோனா தொற்று இல்லாதபட்சத்தில் அவர்களுக்கு கரோனா நெகடிவ் என்ற மருத்துவ அட்டை வழங்கப்படுகின்றன. 

மேலும், தற்போது சோதனை மேற்கொண்டதில் சூரத்தில் 34 ஆட்டோ ஓட்டுநர்களுக்குத் தொற்று சாதகமாக உள்ளதாக சூரத் நகராட்சி ஆணையர் பி.என்.பானி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் சந்தைப்பகுதிகளில் உள்ள கடைக்காரர்களுக்கு கரோனா சோதனை செய்யத் தொடங்கியுள்ளது. 

மேலும், குறிப்பாக ஆட்டோவில் பயணம் செய்யும்போது முகக்கவசம் கட்டாயம் அணியுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தற்போது நிலவரப்படி சூரத் நகரில் மொத்த பாதிப்பு 45,182 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 42,544 ஆகவும் உள்ளது. இதுவரை தொற்று காரணமாக 862 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com