சத்தீஸ்கரில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.100-யிலிருந்து ரூ.500 ஆக அபராதம் உயர்த்தியுள்ளதாக சத்தீஸ்கர் அரசு அறிவித்துள்ளது. 
சத்தீஸ்கரில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம்
சத்தீஸ்கரில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம்

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.100-யிலிருந்து ரூ.500 ஆக அபராதம் உயர்த்தியுள்ளதாக சத்தீஸ்கர் அரசு அறிவித்துள்ளது. 

தொற்றுநோய்கள் பரவுவதைக் கட்டுப்படுத்த 1897 தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் மாநில சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை வியாழக்கிழமை இந்த உத்தரவு பிறப்பித்ததாக மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ளது.

உத்தரவின் படி, பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்குக் கட்டாயம் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். முன்னதாக, விதிமீறலுக்கு ரூ.100 அபராதம் மட்டும் வசூலிக்கப்பட்டது. 

முகக்கவசங்கள் பயன்படுத்துவதைத் தவிர, சமூக விலகல் கடைப்பிடிப்பது மற்றும் கைகளைக் கழுவுதல் உள்ளிட்ட தடுப்பு வழிகாட்டுதல்களையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்று திடீரென அதிகரித்ததைக் கருத்தில் கொண்டு, நிர்வாகிகள் விஆர்பிசி.யின் பிரிவு 144 தடை உத்தரவு விதித்துள்ளது. நான்கு பேருக்கு மேற்பட்டோர் ஒன்றுகூடுவதைத் தடை செய்துள்ளது. 

சத்தீஸ்கரின், ராய்ப்பூர், துர்க், பாஸ்தர், ராய்கர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அனைத்து வகையான மத திருவிழாக்கள், கலாசார, அரசியல் நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்வுகள், கண்காட்சிகள் ஆகியவற்றுக்குத் தடை விதித்துள்ளது.

கடந்த நான்கு மாதங்களில் இல்லாத வகையில் ஒருநாள் பாதிப்பு 2,419 ஆக வியாழக்கிழமை பதிவாகியுள்ளது. இதையடுத்து, மாநிலத்தில் மொத்த பாதிப்பு 3,32,113 ஆக உள்ளது. இவர்களில், 3,14,769 பேர் குணமடைந்துள்ளனர். அதே நேரத்தில் 4,026 பேர் தொற்று காரணமாக இறந்துள்ளனர் என்று அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com