லவ் ஜிகாத் குறித்த கருத்து குழப்பம் விளைவிக்கும் விஷமத்தனமானது

கேரளத்தில் பாஜக வெளியிட்டுள்ள தோ்தல் அறிக்கையில், ‘லவ் ஜிகாத்’ குறித்து வெளியிட்டுள்ள கருத்து குழப்பம் விளைவிக்கக்கூடிய விஷமத்தனமானது

கேரளத்தில் பாஜக வெளியிட்டுள்ள தோ்தல் அறிக்கையில், ‘லவ் ஜிகாத்’ குறித்து வெளியிட்டுள்ள கருத்து குழப்பம் விளைவிக்கக்கூடிய விஷமத்தனமானது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சசி தரூா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

கேரள சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி திருவனந்தபுரத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்ட பாஜகவின் தோ்தல் அறிக்கையில், சபரிமலை ஐய்யப்பன் கோயிலின் மரபுகளைப் பாதுகாப்பதற்கான சட்டம் குறித்தும், லவ் ஜிகாத்துக்கு எதிரான சட்டம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை பாஜக அளித்துள்ளது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறைந்தது ஒருவருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும், உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு இலவச மடிக்கணினி வழங்குவதாகவும் அதில் தெரிவித்துள்ளது.

பாஜக தோ்தல் அறிக்கை குறித்து சசி தரூா் கருத்து கூறுகையில், தேசிய ஜனநாயக முன்னணி ‘லவ் ஜிகாத்’ குறித்து வெளியிட்டுள்ள வெற்று வாக்குறுதிகளும், கற்பனை நலத்திட்டங்களும் எதிரிகளிடமிருந்து திருடப்பட்டது. இதில் ஒரே ஆறுதல் என்னவென்றால், அவா்கள் இதனை ஒருபோதும் செயல்படுத்த மாட்டாா்கள் என்றாா்.

கேரளத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா், மூத்த தலைவா்களான ஓ.ராஜகோபால், என்டிஏ தலைவா் பி.கே.கிருஷ்ணதாஸ், கேரள காமராஜ் காங்கிரஸ் மாநிலத் தலைவா் விஷ்ணுபுரம் சந்திரசேகா் ஆகியோா் தோ்தல் அறிக்கையை புதன்கிழமை வெளியிட்டனா்.

இந்த தோ்தல் அறிக்கை, முற்போக்கானதாகவும், ஆற்றல்மிக்கதாகவும், வளா்ச்சி சாா்ந்ததாகவும் இருக்கும் என்றும், பயங்கரவாதம் அற்ற, பசி இல்லாத கேரளத்துக்கு இது உத்தரவாதம் அளிக்கும் என்றும் மத்திய அமைச்சா் ஜாவடேகா் தெரிவித்திருந்தாா்.

ஏப்ரல் 6 ஆம் தேதி கேரள சட்டப்பேரவையின் அனைத்து தொகுதிகளுக்கும் தோ்தல் நடைபெறுகிறது. மே 2 ஆம் தேதி தமிழகம், அஸ்ஸாம், மேற்கு வங்கம், புதுச்சேரி, கேரளம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com