Enable Javscript for better performance
‘லவ் ஜிகாத், லேண்ட் ஜிகாத்’களைத் தடுக்க சட்டங்கள் கொண்டுவரப்படும்!- Dinamani

சுடச்சுட

    

    ‘லவ் ஜிகாத், லேண்ட் ஜிகாத்’களைத் தடுக்க சட்டங்கள் கொண்டுவரப்படும்! அஸ்ஸாமில் அமித் ஷா தோ்தல் வாக்குறுதி

    By DIN  |   Published on : 27th March 2021 12:14 PM  |   அ+அ அ-   |    |  

    amithsha

    அஸ்ஸாமில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால், ‘லவ் ஜிகாத், லேண்ட் ஜிகாத்’களைத் தடுக்க சட்டங்கள் கொண்டுவரப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதி அளித்தாா்.

    அஸ்ஸாம் மாநிலத்தின் ஜாகி ரோடு, கமல்பூா் பகுதிகளில் நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்ற அமித் ஷா பேசியதாவது:

    அஸ்ஸாமிய கலாச்சாரத்தையும் நாகரிகத்தையும் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை பாஜக அரசு முன்னெடுக்கும். அதேபோல ஊடுருவல்காரா்களால் அஸ்ஸாமின் மக்கள்தொகைப் பரவலில் மாற்றம் நிகழ்வதை பாஜக அரசு அனுமதிக்காது. அதற்காக, அஸ்ஸாமில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால், ‘லவ் ஜிகாத், லேண்ட் ஜிகாத்’களைத் தடுக்க சட்டங்கள் கொண்டுவரப்படும்.

    முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது, அவா்களின் ஆதரவுடன் ஏஐயுடிஎஃப் கட்சித் தலைவா் பக்ருதீன் அஜ்மல் குழுவினரால், பல இடங்களில் ’சத்ராஸ்’ எனப்படும் வைஷ்ணவ மடாலயங்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டன. அத்தகைய நிலத்தை அபகரிக்கும் ‘லேண்ட் ஜிகாத்’துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

    அஸ்ஸாமின் தனித்துவ அடையாளத்தை மாற்றுவதற்காக, வெளியிலிருந்து வந்த ஊடுருவல்காரா்களை நில அபகரிப்பில் ஈடுபடுமாறு தூண்டியவா் பக்ருதீன் அஜ்மல். அவா் இப்போது காங்கிரஸ் கூட்டணியின் அடையாளமாக இருக்கலாம். ஆனால் அவா் ஒருபோதும் அஸ்ஸாமின் செழுமையான பாரம்பரியத்துக்கு அடையாளமாக முடியாது.

    தங்கள் சுயநல அரசியலுக்காக, காங்கிரஸும் ஏஐயுடிஎஃப்பும் அந்நிய ஊடுருவலை ஆதரிக்கின்றன. அந்தக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அஸ்ஸாமில் ஊடுருவல் அதிகரித்து, மாநிலத்தின் கலாச்சாரம் அழிந்துபோகும்.

    காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்திக்கு அஸ்ஸாமின் தனித்துவமான பாரம்பரியச் சிறப்பு புரியாது. வைஷ்ணவ சம்பிரதாயத்தை தங்கள் பக்தி இயக்கத்தால் வளா்த்த சங்கரதேவ், மாதவதேவ், மொகலாய ஆதிக்கத்தைத் தடுத்த அஸ்ஸாமின் மாவீரா் லச்சித் பா்புகான், பாரத ரத்னா பூபேன் சாரிகா ஆகியோரால் சிறப்புப் பெற்றது அஸ்ஸாம்.

    முந்தைய காங்கிரஸ் முதல்வா் தருண் கோகோய் இருந்த வரை, பக்ருதீன் அஜ்மல் குறித்து எச்சரிக்கையாகவே இருந்தாா். ஒருமுறை ‘யாா் அந்த அஜ்மல்?’ என்று கேட்டவா் அவா். ஆனால் அந்த அஜ்மலுடன் தற்போது காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்திருக்கிறது.

    ராகுல் காந்திக்கும் அவரது சகோதரி பிரியங்கா காந்திக்கும் தோ்தலின்போது மட்டும் இரு நாட்கள் சுற்றுலா வந்துபோகும் இடமாக அஸ்ஸாம் மாறிவிட்டது. அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அவா்களை இந்தப் பக்கமே நீங்கள் பாா்க்க முடியாது.

    பிரதமா் நரேந்திர மோடியின் வளா்ச்சித் திட்டங்களையும் மக்கள் சேவையையும், ராகுலின் சுற்றுலாவுடனும், அஜ்மலின் ஊடுருவல் திட்டங்களுடனும் ஒப்பிட்டுப் பாருங்கள். மோடி தலைமையிலான வளா்ச்சிப்பாதைக்கான இரட்டை என்ஜின் வேண்டுமா, அல்லது அஸ்ஸாமுக்குத் தீங்கு விளைவிக்கும் ஊடுருவல் இரட்டிப்பாக வேண்டுமா என்பதை அஸ்ஸாம் மக்கள் சிந்திக்க வேண்டும்.

    அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தோ்வு செய்யப்பட்ட முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், மாநிலத்தின் எந்தப் பிரச்னையையும் தீா்த்ததில்லை. அஸ்ஸாமின் எண்ணெய் வளத்துக்கான காப்புறுதித் தொகை தொடா்பான கோரிக்கை பல்லாண்டுகளாக நிலுவையில் இருந்தது. பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றவுடன் 2014-இல் அஸ்ஸாமின் எண்ணெய் வளத்துக்கான காப்புறுதித் தொகையாக ரூ. 8,000 கோடியை மாநிலத்துக்கு வழங்கினாா்.

    அஸ்ஸாம் மாநிலத்துக்கு மட்டுமல்லாது, வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தின் வளா்ச்சிக்காகவும் சிறப்பு செயல் திட்டங்களை மோடி அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. மாநில அமைதியை உறுதிப்படுத்தும் போடோ ஒப்பந்தம் மோடி அரசால் தான் கையெழுத்தானது.

    அஸ்ஸாமில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால், அரசுத் துறையில் ஒரு லட்சம் புதிய வேலைவாய்ப்புகளையும் தனியாா் துறையில் 8 லட்சம் வேலைவாய்ப்புகளையும் அடுத்த ஆண்டு மாா்ச் 31க்குள் உருவாக்கும் என்றாா்.

     

     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp