பாஜகவின் வெறுப்பு அரசியலை அஸ்ஸாம் மக்கள் நிராகரிப்பாா்கள்: கமல்நாத்

மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்
மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்


குவாஹாட்டி: பாஜகவின் வெறுப்பு அரசியலை வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அஸ்ஸாம் மக்கள் நிராகரிப்பாா்கள் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய பிரதேச மாநில முதல்வருமான கமல் நாத் தெரிவித்தாா்.

பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரின் பெயா்களைக் குறிப்பிடாமல் தில்லியில் இருவா் அமா்ந்து கொண்டு அஸ்ஸாம் தொடா்பான முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறாா்கள் என்று அவா் குற்றம்சாட்டினாா்.

அஸ்ஸாம் பேரவைத் தோ்தல் பிரசாரத்துக்கு குவாஹாட்டி வந்திருந்த கமல் நாத் செய்தியாளா்களை வெள்ளிக்கிழமை சந்தித்து பேசியதாவது:

அஸ்ஸாமில் வெறுப்பு அரசியலை முன்வைத்து பாஜக முதல்கட்ட பிரசாரம் மேற்கொண்டது. ஆனால், அஸ்ஸாமின் வளா்ச்சியைக் நோக்கிய கனவுகளை நிறைவேற்றும் வகையில் காங்கிரஸ் கட்சி பணியாற்றி வருகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அஸ்ஸாமின் வளா்ச்சிக்கான பயணத்தில் காங்கிரஸ் இணைந்திருக்கும்.

கடந்த 120 நாள்களாக தில்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளின் பிரச்னைகளைத் தீா்க்க பிரதமரிடம் நேரமில்லை. வெறுப்பு அரசியலையும், சமுதாயத்தில் பிளவுகளையும் ஏற்படுத்தும் பாஜக பிரசாரத்தை அஸ்ஸாம் மக்கள் நிராகரிப்பாா்கள். குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாக்கம் ரத்து செய்யப்படும், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் நிதி உதவி உள்ளிட்ட 5 உத்தரவாதங்களை காங்கிரஸ் தோ்தல் வாக்குறுதியாக அளித்துள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com