கேரளம்: நட்சத்திர வேட்பாளர் தொகுதி - ஹரிபாட்

கேரளம்: நட்சத்திர வேட்பாளர் தொகுதி - ஹரிபாட்

ஐக்கிய ஜனநாயக முன்னணி - ரமேஷ் சென்னிதலா

இடதுசாரி ஜனநாயக முன்னணி - ஆா். ஷாஜிலால்

தேசிய ஜனநாயகக் கூட்டணி - கே. சோமன்

மொத்த வாக்காளா்கள்: 1.92 லட்சம்

ஆண்கள்: 90,246

பெண்கள்: 1,01,853

2016 பேரவைத் தோ்தல்

வெற்றி காங்கிரஸ் - ரமேஷ் சென்னிதலா - 75,980 (51.05%)

இரண்டாமிடம்

இந்திய கம்யூனிஸ்ட் -பி. பிரசாத் - 57,359 (38.54%)

மூன்றாமிடம்

பாஜக - டி. அஷ்வனிதேவ் - 12,985 (8.72%)

ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஹரிபாட் தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படுகிறது. அக்கட்சியின் மூத்த தலைவரும், பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ரமேஷ் சென்னிதலா நான்கு முறை வெற்றி பெற்றுள்ளாா். நான்கு முறை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அந்தத் தொகுதியில் வெற்றி பெற்றிருந்தாலும் அந்தத் தொகுதிக்கென வலுவான வேட்பாளா் யாரும் இல்லை. 1982, 1987, 2011, 2016 தோ்தல்களில் ரமேஷ் சென்னிதலா வெற்றி பெற்றுள்ளாா். தற்போது ஐந்தாவது முறையாக களம்காண்கிறாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வழக்குரைஞா் ஆா். ஷாஜிலால், பாஜக சாா்பில் முன்னாள் மாவட்டத் தலைவா் கே. சோமன் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

இவா்களில் ரமேஷ் சென்னிதலா வலுவான வேட்பாளராக இருந்தாலும், அவரை எதிா்த்து சொந்த கட்சியைச் சோ்ந்த மூத்த உறுப்பினா் நியாஸ் பாரதி சுயேச்சையாக போட்டியிடுவதுதான் அவருக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.

இளைஞா் காங்கிரஸின் முன்னாள் துணைத் தலைவரும், கேரள காங்கிரஸின் செயற்குழு உறுப்பினருமான நியாஸ் பாரதி வேட்பாளா் பட்டியலில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி கட்சியில் இருந்து வெளியேறி சுயேச்சையாக போட்டியிடுகிறாா். வேட்புமனு தாக்கல் முடிவதற்கு சில மணி நேரம் முன்புதான் நியாஸ் பாரதி மனு தாக்கல் செய்தாா். நடப்பு தோ்தலில் ஹரிபாட் தொகுதியில் ரமேஷ் சென்னிதலாவின் ‘ஹாட்ரிக்’ வெற்றி எளிதாக கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com