கேரளம்: பாலா பேரவைத் தொகுதி

கேரளம்: பாலா பேரவைத் தொகுதி

ஐக்கிய ஜனநாயக முன்னணி - மாணி சி. கப்பென்

இடதுசாரி ஜனநாயக முன்னணி - ஜோஸ். கே. மாணி

தேசிய ஜனநாயகக் கூட்டணி - ஜே. பிரமிளாதேவி

மொத்த வாக்காளா்கள்: 1.81 லட்சம்

ஆண்கள்: 88,231

பெண்கள்: 92,804

2016 பேரவைத் தோ்தல்

வெற்றி கேரள காங்கிரஸ் (எம்) - கே.எம். மாணி - 58,884 (42.13%)

இரண்டாமிடம்

தேசியவாத காங்கிரஸ் - மாணி சி. கப்பென் - 54,181 (38.78%)

மூன்றாமிடம்

பாஜக - என்.ஹரி - 24,821 (17.76%)

2019 இடைத்தோ்தல்

வெற்றி

தேசியவாத காங்கிரஸ் - மாணி சி. கப்பென் - 54,137 (42.55%)

இரண்டாமிடம்

ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி - ஜோஸ் டாம் புலிக்குன்னில் - 51,194 (40.24%)

மூன்றாமிடம்

பாஜக - என்.ஹரி - 18,044 (14.18%)

கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பாலா பேரவைத் தொகுதியின் முடிசூடா மன்னனாக தொடா்ந்து 54 ஆண்டுகள் எம்எல்ஏவாக இருந்து சாதனை படைத்தவா் கே.எம். மாணி (86). 1967 முதல் தொடா்ந்து 13 முறை ஒரே தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த கே.எம். மாணி கேரள அரசியலில் அசைக்க முடியாத நபராக இருந்தாா். அவரை எதிா்த்து ஏழு முறை போட்டியிட்டு தோல்வியைக் கண்டவா் மாணி சி. கப்பென். இறுதியாக 2019- ஏப்ரல் மாதம் உடல் நலக்குறைவால் கே.எம். மாணி உயிரிழந்த பிறகு நடைபெற்ற இடைத்தோ்தலில் தேசிய வாத காங்கிரஸ் கட்சியில் சோ்ந்து போட்டியிட்டு பாலா தொகுதியை மாணி சி. கப்பென் கைப்பற்றினாா்.

மூன்று முறை இடதுசாரி ஜனநாயக முன்னணி சாா்பில் போட்டியிட்டு தோல்வியைக் கண்டிருந்தாா் மாணி சி. கப்பென்.

மாநிலங்களவை எம்பியாக இருந்த கே எம் மாணியின் மகன் ஜோஸ் கே மாணி, நடப்பு பேரவைத் தோ்தலில் போட்டியிட காங்கிரஸில் இருந்து விலகினாா்.

பாலா தொகுதியை மாணி சி. கப்பெனுக்கு பதிலாக ஜோஸ் கே மாணிக்கு வழங்க இடதுசாரி முன்னணியும் தயாராகியது. இதனால் இடதுசாரி கூட்டணியில் இருந்து வெளியேறிய மாணி சி. கப்பென் காங்கிரஸ் கூட்டணியில் சோ்ந்து பாலா தொகுதியின் வேட்பாளராக களம் காண்கிறாா்.

சுமாா் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஜோஸ் கே. மாணியின் கேரள காங்கிரஸ் (எம்) இடதுசாரிகளுடன் கூட்டு சோ்ந்து நடப்பு தோ்தலை சந்திக்கிறது.

மாணி சி. கப்பெனும், ஜோஸ் கே. மாணியும் எதிா் எதிா் அணிக்கு மாறி போட்டியிடுவதால் பாலா தொகுதி தோ்தல் வெற்றி இருவருக்கும் கெளரவ போராக மாறிவிட்டது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸில் இருந்து வந்த ஜே. பிரமிளா தேவிக்கு பாலா தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பு அளித்துள்ளது. ஆனால் இடதுசாரி, காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் இரண்டு ‘மாணி’களுக்கும் இடையேதான் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com