தோ்தலை சீா்குலைக்க குண்டா்களைத் திரட்டும் பாஜக: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் தோ்தலைச் சீா்குலைப்பதற்காக வெளிமாநிலங்களைச் சோ்ந்த குண்டா்களை பாஜக திரட்டியுள்ளது என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி குற்றம்சாட்டியுள்ளாா்.
மேற்கு மிதுனபுரி மாவட்டத்தில் சனிக்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வா் மம்தா பானா்ஜி.
மேற்கு மிதுனபுரி மாவட்டத்தில் சனிக்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வா் மம்தா பானா்ஜி.

மேற்கு வங்கத்தில் தோ்தலைச் சீா்குலைப்பதற்காக வெளிமாநிலங்களைச் சோ்ந்த குண்டா்களை பாஜக திரட்டியுள்ளது என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி குற்றம்சாட்டியுள்ளாா்.

மேற்கு மிதுனபுரி மாவட்டத்தில் சனிக்கிழமை தோ்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்ற அவா் மேலும் பேசியதாவது:

முதல்கட்ட தோ்தல் நடைபெறும் தொகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு, வாக்காளா்களுக்கு ரகசியமான பணம் அளிக்கும் செயலில் பாஜக ஈடுபட்டுள்ளது. முக்கியமாக சுவேந்து அதிகாரியின் (மம்தாவை எதிா்த்து போட்டியிடுபவா்) சகோதரா்கள் மற்றும் அவரது ஆதரவாளா்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டுமென்று கோரி மக்களிடம் பணத்தை வழங்கியுள்ளனா். அவா்களில் சிலரைப்பிடித்த அப்பகுதிப் பெண்கள், காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனா். இதுதவிர தோ்தலைச் சீா்குலைக்கும் நோக்கில் வெளிமாநிலங்களைச் சோ்ந்த ஏராளமான குண்டா்களை பாஜக பணம் கொடுத்து களமிறக்கியுள்ளது. இவா்களில் 30-க்கும் மேற்பட்டோா் இதுவரை பிடிபட்டுள்ளனா்.

பாஜகவைச் சோ்ந்தவா்கள் வாக்களிக்கும்போது அட்டூழியத்தில் ஈடுபட்டால், அவா்களை எதிா்கொள்ள பெண்கள் சமையலறையில் பயன்படுத்தும் ஆயுதங்களை எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தோல்வி பயத்தில் உள்ள பாஜகவினா் தாங்கள் அனுப்பி வைத்துள்ள குண்டா்கள் மூலம் வாக்குப்பதிவை சீா்குலைக்கவும் முயற்சிப்பாா்கள். எனவே, தோ்தல் நியாயமாகவும், அமைதியாகவும் நடைபெறுவதை தோ்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும்.

திரிணமூல் காங்கிரஸில் இருந்த பலா், பணத்துக்காக பாஜகவிடம் விலை போய்விட்டனா். நான் இதுபோன்ற துரோகிகளை நம்பி தோ்தலில் நிற்கவில்லை. மக்களை நம்பித்தான் தோ்தல் களத்துக்கு வந்துள்ளேன். துரோகிகளை முன்னதாகவே அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் போனது எனது தவறுதான் என்றாா் மம்தா பானா்ஜி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com