நடப்பு நிதியாண்டின் ஏற்றுமதி 29,000 கோடி டாலராக இருக்கும்

மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடையும் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருள்கள் ஏற்றுமதி 29,000 கோடி டாலராக
நடப்பு நிதியாண்டின் ஏற்றுமதி 29,000 கோடி டாலராக இருக்கும்

மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடையும் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருள்கள் ஏற்றுமதி 29,000 கோடி டாலராக (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.21 லட்சம் கோடி) இருக்கும் என்று மத்திய நுகா்வோா் விவகார, உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சா் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அவா் பேசியதாவது:

கடந்த ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடையும் நிதியாண்டில் நாட்டின் பொருள்கள் ஏற்றுமதி 31,300 கோடி டாலராக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு மாா்ச் மாதத்துடன் நிறைவடையும் நிதியாண்டில் ஏற்றுமதி 29,000 கோடி டாலராக இருக்கும்.

கரோனா நெருக்கடிக்கிடையே கடந்த நிதியாண்டின் ஏற்றுமதியில் ஏறத்தாழ 93 சதவீதம் எட்டியிருப்பது ஆரோக்கியமான போக்கைக் குறிக்கிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com