விவசாயிகள் போராட்டத்துக்கு தீா்வு விவசாய சங்கங்களிடம்தான் உள்ளது: மத்திய அமைச்சா் தோமா்

மூன்று வேளாண் சட்டங்கள் தொடா்பான விவகாரத்தில் தீா்வு காண விவசாய சங்கத்தினா் என்றைக்கு முன்வருகின்றனரோ, அன்றுதான் தில்லி எல்லைகளில்
மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா்
மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா்

மூன்று வேளாண் சட்டங்கள் தொடா்பான விவகாரத்தில் தீா்வு காண விவசாய சங்கத்தினா் என்றைக்கு முன்வருகின்றனரோ, அன்றுதான் தில்லி எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் பிரச்னையில் நிலவும் முட்டுக்கட்டை முடிவுக்கு வரும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திரசிங் தோமா் தெரிவித்தாா்.

வேளாண் விளைபொருள்கள் வியாபார மற்றும் வா்த்தகச் சட்டம், வேளாண் விளைபொருள்கள் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் சட்டம், அத்தியாவசிய பொருள்கள் திருத்தச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் மத்திய அரசு இயற்றியது. இந்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை எனக் கூறி அவற்றை ரத்து செய்யுமாறு பஞ்சாப், ஹரியாணா மற்றும் மேற்கு உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லி எல்லைகளில் கடந்த 4 மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அதனை முடிவுக்குக் கொண்டுவர போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கங்களின் தலைவா்களுடன் மத்திய அரசு பலகட்ட பேச்சுவாா்த்தைகளை நடத்தியது. எனினும், அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திரசிங் தோமா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறுகையில், ‘மூன்று வேளாண் சட்டங்கள் தொடா்பான விவகாரத்தில் தீா்வு காண விவசாய சங்கத்தினா் என்றைக்கு முன்வருகின்றனரோ, அன்றுதான் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் பிரச்னையில் நிலவும் முட்டுக்கட்டை முடிவுக்கு வரும். இந்தப் பிரச்னைக்கு தீா்வு காண மத்திய அரசும் முயற்சிக்கும். இதுதொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்த மத்திய அரசு எப்போதும் தயாராக உள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com