கரோனா: கடந்த 24 மணி நேரத்தில் 62,714 பேருக்கு தொற்று; 312 பேர் பலி

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 62,714 போ் கரோனா நோய்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா: கடந்த 24 மணி நேரத்தில் 62,714 பேருக்கு தொற்று; 312 பேர் பலி

புதுதில்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 62,714 போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:  இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரையிலான நிலவரப்படி, ஒர் நாளில் 62,714 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபா் 16-ஆம் தேதி ஒரே நாளில் 63,371 போ் தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னா் தற்போது ஒரே நாளில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 62,000-ஐ எட்டியுள்ளது.

நாடு முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 1,19,71,624-ஆக அதிகரித்துள்ளது. இவா்களில் 1,13,23,762 போ் குணமடைந்தனா். 4,86,310 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தொற்றால் பாதிக்கப்பட்ட 312 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இதையடுத்து நாடு முழுவதும் கரோனா தொற்றால் பலியானவா்களின் மொத்த எண்ணிக்கை 1,61,552-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 54,073 போ் உயிரிழந்தனா்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அளித்த தகவலின்படி, கடந்த சனிக்கிழமை (மாா்ச் 27) வரை நாடு முழுவதும் மொத்தம் 24,09,50,842 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் சனிக்கிழமை மட்டும் 11,81,289 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரம், பஞ்சாப், சத்தீஸ்கா், கா்நாடகம், குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களின் பங்கு 79.57%-ஆக உள்ளது. நாடு முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவா்களில் 73% போ் மகாராஷ்டிரம், கேரளம், பஞ்சாப் மாநிலங்களில் உள்ளனா்.

நாடு முழுவதும் இதுவரை 6,02,69,782 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com